பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. வுடன் நான் 6 r அச்சுக்கூடம் நிறுவிப் பணி புரியத் தொடங்கிய திரு. வி. க. அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரும் புயல் வீசியது. அவர்தம் ஆருயிர்த் துணைவியாராய கமலாம்பிகை அம்மையார் இவ்வுலக வாழ்வை நீத்தார் கள். துன்பப் புயலும் வறுமைத் தீயும், உள்ள உறுதி வாய்ந்த நம் தமிழ்ப் பெரியார் அவர்களை என் செய்யும்? தமிழ்ப் பெரியார் கடமை மறவா முனிவராளுர். துன் பங்களில் ஆழ்ந்து மனத் தளர்ச்சியடையாமல் மேலும் உள்ள உறுதி பூண்டு தொழிலாளர் தலைவராக இருந்து அரும்பெருஞ் சாதனைகளைப் புரிந்தார். ஆங்கிலப் பட்டமோ, அயல்நாட்டு அனுபவங்களோ ஒரு சிறிதும் இல்லாத ஒரு தமிழ்ப் புலவர் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒன்று படுத்திக் கடமைகளை உணர்த்தி நிலையான இயக்கத்தினைக் கண்டார். பெண் கல்வி என்று பெண்களுக்காக உரிமைக் குரல் எழுப்பி யவர் நம் திரு வி. க. அவர்களேயாவர். அவர்தம் பேச்சிலும் எழுத்திலும் பெண்ணின் பெருமை மிளிர்ந்: தது. பெண்மையின் சிறப்பு ஒளிர்ந்தது. பல்வேறு பணிகளுக்கிடையே என்றும் நிலைத்து நிற்கும் பல அரிய தமிழ் நூற்களைத் திரு. வி. க. அவர் கள் எழுதி வெளியிட்டார்கள். முருகன் அல்லது. அழகு, பெண்ணின் பெருமை, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, தமிழ்த் தென்றல், படுக்கைப் பிதற். றல், இருளில் ஒளி முதலிய ஐம்பதுக்கும் மேற்பட்ட அழியாச் செல்வங்களைத் திரு. வி. க. அவர்கள் அளித் தாாகள. திரு. வி. க. அவர்கள் திருக்குறட் கொள்கையே உலக ஒற்றுமைக்கு வழிகோலும் என்னும் எண்ணத்