பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'62 கித்திலக் கட்டுரைகள்


தைக் கொண்டிருந்தார். நான் திரு. வி. க. அவர் களுடன் கலந்து உரையாடிய போதெல்லாம் இக்கருத் தினையே அடிக்கடி வலியுறுத்திக் கூறுவார். திரு. வி. க. அவர்களுக்கு எழுபதாம் ஆண்டு துவங்கும் பொன்னுள் வந்தது. நானும் என் நண்பர்கள் சிலரு மாகத் தமிழ்ப் பெரியார் அவர்களைக் கண்டு வணக்கம் தெரிவித்து, வாழ்த்துரை பெற்றுவர அவர்தம் இல்லத் திற்குச் சென்ருேம். அவர் அன்று உடம் நலம் குன்றிப் படுத்த வண்ணம் இருந்தும் எங்களைக் கண்டதும் தம் பிணி யையும் பொருட்படுத்தாமல் படுக்கையைவிட்டு எழுந்து வணக்கம் தெரிவித்து எங்கள் அனைவரையும் உள்ளன்போடு வரவேற்று வாழ்த்தியருளினர். 'உலகம் ஒரு குடும்பமாகத் திகழ்வது எங்ங்னம் ?’ என் னும் பொருள் குறித்துத் தமிழ்ப் பெரியாருடன் உரை யாடத் தொடங்கினுேம். அவர் தமிழ் நாட்டினையும் பிறநாடுகளையும் அரித்துவரும் பிளவும், பிரிவும், பிணக் கும் தேய்ந்து மறைந்து மக்களனைவரையும் ஒன்று படுத்த வல்ல மா மருந்து திருவள்ளுவம் ஒன்றுதான் என்று உறுதியாகக் கூறினர். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களின் இறுதி நாட்களை எண்ணிப் பார்த்து எழுத என் உள்ளம் பெரி தும் கவல்கின்றது. 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் நான் என் நண்பர்களுடன் திரு. வி. க. அவர்களைக் காணச்சென்றிருந்தேன். உடல் மெலிந்து கண்பார்வை இழந்து படுத்த படுக்கையாக இருந்த திரு. வி. க. அவர்களைக் கண்டதும் ஆற்ருெணுத் துய ருற்றேன். என் வரவை உணர்ந்த தமிழ்ப்பெரியார்