பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. வுடன் கான் 68

  • வாரும் பழைய நண்பரே " என்று இயம்பி ஆர்வம் மீக்கூரப் படுக்கையினின்றும் எழுந்திருக்க முயன்ருர். அவர்களைத் தடுத்துப் படுத்திருக்குமாறு கேட்டுக் கொண்டேன். படுத்திருந்தே பேச ஆரம்பித்தார். மிகுந்த உடல்நலிவிலும் அவருடைய கணிரென்ற வெண்கலக் குரல் மண்டபத்தில் எதிரொலித்தது. அந்தப் பேச்சே அவருடைய இறுதிப் பேச்சாக அமைந்து விட்டதே என்பதை எண்ணி யெண்ணி அலமருகின்றேன்.

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. மறைந்தார் என்ற துயர்மிகு செய்தி என்னையும் என்போன்ற ஆயிரக் கணக்கான அன்பர்களையும் சோக வடிவங்களாக ஆக்கி விட்டது. ஆடவரும் மகளிரும், பண்டிதரும் பாமரரும் செல்வரும் ஏழைகளும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து தமிழ்ப் பெரியாரின் திரு. வுருவத்திற்கு வணக்கம் தெரிவித்துச் சென்றனர். பெரிய தமிழ் வீரராக இறக்கும் தருணம் வரையில் மக்களுக்காகவே உழைத்த அந்தப் பெரியாரின் நினை வுகளை எண்ணுந்தோறும் பொதுப் பணியிலே பேரூக் கம் பெறுகின்றேன். அவர்தம் பொன்னுரைகள் என் றும் என் செவிகளில் ஒலித்த வண்ணமிருந்து என் தொண்டுகளுக்கு ஆக்கம் அளித்து வருகின்றன. வாழ்க திரு. வி. க. வின் திருப்பெயர் !