பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் ஆசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் என் பவர் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி பில் ஆரும் வகுப்பு மாணவர்களுக்குத் திருக்குறள் பாடம் நடத்தத் துவங்கியபோது திருவள்ளுவரைக் குறித்தும் அவர் இயற்றிய திருக்குறளைக் குறித்தும் முன்னுரையாக ஒரு சில கூறி முடிவில் திருவள்ளுவ மாலை என்னும் நூலிலிருந்து ஒரு பாடலையும் மேற் கோளாக எடுத்துக் கூறினர். அது வருமாறு : எல்லாப் பொருளும் இதன் பால் உள ; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்-சொல்லால் பரந்தபா வால் என் பயன் வள் ளுவளுர்

சுரந்தபா வையத் துனே. எங்கள் பேராசிரியர் இந்தப் பாடலைக் கூறி இதற் குப் பொருளும் உரைத்தனர். அப்போது ஒரு மாண வன் எழுந்து, ஐயா ! எல்லாப் பொருளும் இதன் பால் உள என்பது உண்மையா ?' என்று ஆச்சரியத் தோடு வினவின்ை.