பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியரசரும் கானும் Go, கணக்கில் இன்றும் இருக்கிருர்கள். அவர்களுள் அடியேனும் ஒருவன். அத்தகைய பேரறிஞர் சரிதத்தில் ஒரு சில நிகழ்ச்சி களை மட்டும் நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம். அவர் பிறந்தது செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த மணிமங்கலம் என்னும் கிராமமாகும். அந்த மணி' மங்கலம் என்ற பெயரே சுருக்கமாக் மணி என்று அவருக்கு அமைந்துவிட்டது. அவர் இப்போது இருந்திருப்பாராளுல் நமது மதிப்பு மிக்க ஜவர்லால் நேரு அவர்கள் வயதுக்குச் சமமாக இருப்பார். அறி வாலும் ஆற்றலாலும் நம் தமிழ் நாட்டிற்கு ஒரு மாணிக்கமாகவே திகழ்ந்திருப்பார். ஆல்ை அந்தோ ! அவர் தம் 42-ஆவது அகவையிலேயே எங்களை யெல் லாம் வருந்தும்படி செய்து விண்ணுலகை அடைந்து விட்டார். அந்த வயதிற்குள்ளாகவே அவர் ஆற்றி யுள்ள அருஞ் செயல்கள் பலவும் அறிஞர்களால் பாராட் டக்கூடியனவாகவே இருக்கின்றன. அவர் ஆரம்பப்பள்ளி வரையில் தங்கள் கிராமத்தி லேயே படித்துவந்தார். அந்தச் சிறு வயதிலேய்ே பல அரிய நீதி நூல்களையும், அந்தாதி, கலம்பகம், தேவாரம், திருவாசகம் முதலியவைகளை யெல்லாம் மனப்பாடம் செய்யத் துவங்கி விட்டார். பாரதம், இராமாயணம் முதலிய கதைகளைக் கூடத் தம் தந்தையாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு தம் வயதையொத்த சிறுவர்கட்கெல்லாம் அவர்கள் மகிழும் வகையிலே சொல்லுவதில் வல்லமை பெற்றிருந்தார். அவர் நாள்தோறும் காலையில் எழுந்ததும் 'கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்" என்னும் அடியையுடைய тѣ. - 5