பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கித்திலக் கட்டுரைகள் பட்டினத்தார் பாடலைப்பாடி,"எல்லாப்பிழையும் பொறுத் தருள் வாய்' என்று கூறிக் கடவுளை வணங்கிய பிறகே படிக்கத் துவங்குவாராம். அவர் ஒவ்வொரு வகுப்பிலே யும் முதல்வராகவே இருந்துவந்தார். அவர் எட்டாம் வகுப்பு அரசாங்கத் தேர்வுக்குச் சென்றிருந்து விடை யெழுதி விட்டு வரும்போது மிகவும் வருத்தத்தோடு இருந்தார். அப்போது அவர் தம்பி ' என்ன அண்ணு ! உங்கள் முகம் வாட்டமாக இருக்கின்றது, தேர்வில் விடை சரியாக எழுதவில்லையா ? என்று கேட்டார். உடனே அவர், நான் அதற்காக வருந்தவில்லை, கடின மான கேள்விகள் எல்லாம் இருக்க அரசாங்கத்தார் மிகவும் எளிய கேள்விகளையே கேட்டுவிட்டார்கள். இந்தக் கேள்விகளுக்கு எல்லோருந்தாம் விடையெழு தப் போகின்ருர்கள். என் படிப்பின் திறமையைக் காட்டுவதற்கு ஒன்றிரண்டு கேள்விகள் கூடச் சிறந்த தாக இல்லாமற் போய் விட்டதே ! என்ற வருத்தம் தான்' என்ருர். செங்கற்பட்டில் அவர் எட்டாம் வகுப்பு வரையில் படித்தார். அங்கே இருந்த ஆசிரியர்கள் எல்லாம் அவருடைய திறமையைக் கண்டு, "இந்தச் சிறுவன் எப்படியும் ஒரு கலெக்டராகவாவது வரப்போகிருன் பாருங்கள் ' என்று மற்றப் பிள்ளைகளிடம் சொல்லு வர்களாம். அந்தச் செங்கற்பட்டிலே விளையாட்டிலே கூடச் சிறந்து விளங்கித் தம் வயதை யொத்த மாணவர் களுக்கெல்லாம் ஒரு தலைவனைப் போன்று இருந்து வந்தாராம். ஒரு முறை ஒரு புது ஆசிரியர் வகுப்புக்கு வந்தபோது சில மாணவர்கள் அவருக்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினர்களாம். இதை அறிந்த