பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கித்திலக் கட்டுரைகள் பெயர் முதலியவற்றைக் கேட்டறிந்து தம் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போகும்படி தெரிவித்தாராம். அந்தப் பேராசிரியரின் உதவியால்தான்-இந்தப் பேராசிரியர் தமிழாசிரியர் பதவியைப் பெற்ருர், அந்தப் பெரியா ரின் மூலமாக இவரும் பல பெரியோர்களின் நட்பை யெல்லாம் பெற்றர். என்னை அவர் மாணவராக ஏற்றுக்கொண்ட வரலாறும் மிகவும் சுவையாக இருக்கும். நானும் என் நண்பர் ஒருவரும் பாலர் சபை' என்ற ஒன்றை ஏற்படுத்திளுேம். அந்தச் சபையிலே இளைஞராய அவரும் வந்து சேர்ந்தார். அங்கே அவருடைய பேச் சைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமே அடைந்தேன். அவர் எனக்கு இரண்டு வயது மூத்தவராக இருந்தார். ஆதலால் அவரை ஆசிரியராக ஏற்றுக்கொள்ள நான் முதலில் விரும்பவேயில்லை. அப்படி இருந்தும் என்னையும், என் நண்பர்களையும் அவர் ஒன்ருகச் சேர்த்துக்கொண்டு நாமெல்லாம் ஒன்ருக இருந்து. திருக்குறள் படிக்கலாம் என்று சொல்லிக் கொண்டே எங்களுக்கு அவரே அந்தக் குறளிலுள்ள அரிய நீதி களை யெல்லாம் விளக்கிக்கூற ஆரம்பித்துவிட்டார். அன்றியும், அவருக்கு என்னுடைய குணம் மிகவும். பிடித்துவிட்டது. ஆதலால், அவர் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்து என்னைத் தனியே அழைத்துக் கொண்டுபோய்ப் பலவிதமாகப் பாராட்டி முதலில் என்னைத் தம் மாணவகை ஆக்கிக்கொண்டார். அவ்விதமே என்னைப் போன்ற வயதினையுடைய வர்களாயிருந்த பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலி யார், வா. தி. மாசிலாமணி முதலியார் முதலிய