பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கித்திலக் கட்டுரைகள் எங்கள் ஆசிரியர் பேசுவது போலவே பல அரிய பாடல்களை யெல்லாம் சிறிதும் துன்பமில்லாமல் உடனே பாடிக் காட்டியிருக்கிருர். அவர் ஒரு நாள் குளத்தில் குளித்துக்கொண்டே ஒர் அன்பரின் மீசையை மட்டும் வர்ணித்து முப்பது பாட்டுக்கள் பாடிக் காட்டினர். மற்ருெரு நாள் நான் விளையாட்டாக முற். காலப் புலவர்களைப் போலப் பாட்டுப்பாடி மழையைப் பெய்விக்க உங்களால் முடியுமா என்று கேட்டேன். அவர் உடனே ஒரு பாட்டைப் பாடி மழையை வரு வித்ததைக் கண்டு நான் ஆச்சரியமே அடைந்தேன். அவருடைய மனப்பாடம் செய்யும் திறமையை நன்ருகத் தெரிந்துகொள்வதற்காக நான் ஒரு நாள் எங்கள் ஆசிரியரிடம் அவ்வையார் பாடியுள்ள 'வெண்பாவை ஒரு காலிற் கல்லானே' என்னும் பாட்டைப் பாடிக் காட்டி, "நீங்கள் ஒரு வெண்பாவை ஒரு முறை படித்த உடனே அந்தப் பாட்டைத் தவறில்லாமல் ஒப்பிப்பீர் களா?' என்று கேட்டேன். அவர் அதற்கு வெண்பா மிட்டுமன்று பெரிய விருத்தங்களைக்கூட நான் ஒரு முறை படித்தவுடனே தவறில்லாமல் ஒப்பிப்பேன்." என்ருர், நான் அதைப் பரிசோதிக்க அவர் இதற்கு முன் படித்தே இருக்க மாட்டார் என்று சொல்லத் தக்க ஒரு பாட்ட்ை எழுதிக் கொண்டுவந்து அவரிடம் காட்டினேன். அவர் அதை என்னையே ஒரு முறை நிறுத்திப் படிக்கும்படி சொல்லிவிட்டு உடனே அதைச் சிறிதும் தவறில்லாமல் ஒப்பித்துவிட்டார். ' கல்வி மனப் பழக்கம் ” என்பதை நான் அப்ப்ோதுதான் நன்கு உணர்ந்துகொண்டேன். அவருக்கு ஒரு நாள் தம் இடக்கையில் வெண்குட்டம்