இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(9) ண்டேன் 1959-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் நாள் இரவு 11 மணிக்குமேல் இந்தத் தைமாதப் பொங்கல் மலருக் காக ஒரு கட்டுரை எழுதலாமென்று நான் எண்ணி னேன். பேணுவைக் கையில் பிடித்துக்கொண்டு என்ன எழுதலாமென்று சிறிது நினைத்துப் பார்த்தேன். இந்த ஆண்டு இந்தியாவைக் காண வந்த அமெரிக்க நாட்டுத் தலைவர் நம் தென்னுட்டைப் பார்க் காமல் சென்றுவிட்டாரே அதைக் குறித்து எழுதலாமா என்று எண்ணினேன். நம்மினும் தாழ்ந்த நிலையில் இருந்த சீன இப் போது விழித்துக் கொண்டு நம் நாட்டின்மீது போர் தொடுக்க வந்துள்ள நிலையைக் குறித்து எழுதலாமா என்று எண்ணினேன் நம் நாட்டு இளைஞர்கள் உருவி,ய இளைஞர்களைப் போன்றும் அமெரிக்க இளைஞர்களைப் போன்றும் விஞ் ஞானத்திலே சிறந்து இருந்தால் இத்தகைய மதிப்புக் குறைவு ஏற்படுமா என்று எண்ணியும் ஒருபுறம் வருந் தினேன். பிற நாடுகளெல்லாம் தலைநிமிர்ந்து வாழும்