பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கித்திலக் கட்டுரைகள் இந்தக் காலத்திலே இன்னும் நமக்குள்ளாகவே ஒற்று. மையில்லையே என்றும் எண்ணி வருந்தினேன். நம் நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட எங்கள் ஆசிரியர் மணி. திருநாவுக்கரசர், காவேரிப்பாக் பாக்கம் நமச்சிவாயனுர், தமிழ்ப்பெரியார் திரு. வி. க. இவர்களெல்லாம் இப்போது இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்ற எண்ணமும் ஒருபுறம் எழுந் தது. அண்மையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் நம்மைவிட்டு மறைந்துவிட்ட துயர நிகழ்ச்சியும் நினை வுக்குவர, அவர் ஒருமுறை என்னிடம் விளக்கிக் கூறிய அவர்தம் இளம்பருவ வீரச்செயலை எழுதலாம் என வும் நான் எண்ணினேன். பொங்கல் நன்னுளே தமிழர் தம் புத்தாண்டின் முதல்நாள் என்பதை நம் நாவலர் பாரதியார் அவர் கள் சொல்லுவதையே மேலும் விளக்கி எழுதலாமா என்றும் நாள் எண்ணலாயினேன். இவ்விதம் பலப்பல எண்ணிக்கொண்டே சிறிது. நிமிர்ந்து பார்த்தேன். வட்லூர் வள்ளலார் திருவுருவப். படம் என் கண்முன் தோன்றியது. நம்முடைய வள் ளலார் இறத்தவர்களையெல்லாம் எழுப்பலாம் என்று தெரிவித்தாரே அந்த வித்தையையாவது அவர் சொல்லிச் சென்றிருந்தால் எவ்வளவு நன்ருக இருக் கும் ' என்று எண்ணிப் பார்த்தேன். அதற்குள் இளைப்பும் களைப்பும் மேலிடுவது போன்று இருந்தது. அப்போது மணி இரவு 11-30-க்கு மேல் இருக்கும்: நான் இருந்த அறையில் எவருமே இல்லை. அத் தகைய தனியான இடத்திலே திடும் மென வள்ள லாரே என் கண்முன் தோன்றி, என்னிடத்திலே ஒரு