பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியரசரைக் கண்டேன் 75. சிறு புட்டியைக்கொடுத்து, இதிலுள்ள மருந்தை இறந்: தவர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் தெளித்தால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள்’ என்று. சொல்லி உடனே மறைந்துவிட்டார். என் கையில் அந்த மருந்துப் புட்டிமட்டும் இருந்: தது. அதையெடுத்துக்கொண்டு உடனே நான் நேரே அந்த நள்ளிருளில் மூலைக்கொத்தளத்தில் அமைந் துள்ள இடுகாடு சென்று எங்கள் ஆசிரியரின் நினை வாகக் கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தின்மீது அந்தப் புட்டியில் இருந்த மருந்தில் ஒரு சிறிது எடுத் துத் தெளித்தேன். எங்கள் ஆசிரியர் உறக்கத்திலிருந்து எழுந்தவர் போல் அந்த நினைவுச் சின்னத்திலிருந்து எழுந்து அருகே இருந்த ஒரு திண்ணையின் மீது அமர்ந்தார். அவர் முதலில் என்னை அடையாளம் தெரியாமல் சிறிது விழித்தார். பிறகு உற்றுப் பார்த்து, ‘ ஆ, ! முத்துக்குமாரசாமி ! நீயா இவ்வளவு மாறிவிட்டாய் !’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார். "நான் நன்ருகத் துங்கிவிட்டேன். நான் இன்று 'திராவிடன் இதழில் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தாயா ? அந்தப் பத்திரிகையை எடு என்று அவரே மறுபடியும் என் னைப்பார்த்துக் கேட்டார். அப்போது நான், நீங்கள் அந்தக் கட்டுரையை 1931-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் நாள் சனிக்கிழமை காலை பத்துமணியள வில் எழுதினிர்கள். இப்போது 1959-ஆம் ஆண்டு நிகழ்கிறது. நீங்கள் சொல்லிய திராவிட தினசரி இப் போது வார இதழாக மாறிவிட்டது. சுமார் பன்னி ரண்டு ஆண்டுகளாக என் மாணவர் என். வி. நடராசன்