பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உள்ளம் 85 அவ்விதம் எல்லோரும் குழந்தையாக இருந்தால், அவைகளைக் கண்டு மகிழ்பவர் யாவர் ? எல்லாம் வல்ல இறைவனும் இறைவியுமே அன்ருே ? அவர்கள் இப் போதும் நம்மைக் குழந்தைகளாகவே எண்ணி மகிழ்ந்து கொண்டு இருக்கிருர்கள். அன்றியும் குழந்தைப் பரு வம் குழந்தைக்கு இன்பமா ? நமக்கு இன்பமா ? குழந்தைகள் சாதாரணமாகப் பெரியேர்ராக இருக்கவே விரும்பும். சின்னஞ் சிறு குழந்தைகளும் ஒரு பொம்மைக் குழந்தையை அன்ருே விரும்புகிறது ! அதல்ை அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியோ ராகவே அல்லும் பகலும் முயலுகின்றன ; பொருள் களையறிய ஆரா ய்ச்சி செய்கின்றன. மூன்று மாதக் குழந்தையும் தன் அறிவுக்கு ஏற்ற வகையில் ஆராய்ச்சி செய்ய முயலுகின்றது ; அதற்காகவே அழுகின்றது ; முயற்சி கை கூடினுல் சிரிக்கின்றது. நாம் அதன் செயல்களைக் கண்டு களிக்கின் ருேம். குழந்தையின் உள்ளம், ஓர் ஆராய்ச்சிக்காரனின் உள்ளம் என்றும் கூறலாம். அதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொருள் வேண்டும். அது அப் பொருளைப் பலவகையிலும் ஆராய்ச்சி செய்து பார்க் கும் ; ஆராய்ச்சி முடிந்தபின் அதனை வீசி எறிந்து விடும். குழந்தைகள் சிறிது நேரமேனும் சோம்பியிருப்ப தில்லை. சாதிமத வேற்றுமைகளும் அவைகட்கு இல்லை. சிறு காக்கை குருவி யாவும் அவைகட்கு நண்பர்கள். கள்ள உள்ளம் சிறிதும் இல்லாத அக்குழந்தை கள் பின்னர் அழுக்காறு நிறைந்த தீய மனிதர்களாக மாறிவிடக் காரணம் என்ன ? எனச் சிலர் எண்ண லாம். குழந்தை உள்ளம் கள்ளம் கபடம் அற்றது