உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உள்ளம் 87 குணமாக மாறுதலை நாம் கண்கூடாகப் பல பெரியோர் களிடம் காணலாம். குழந்தைகட்குக் கிழவரிடந்தான் அதிக ஆனந்தம். கிழவர்களும் தம் பெயரர் பெயர்த்தி மார்களிடமே அதிக அன்பினைக் காட்டுகின்றனர். காந்தி அடிகளார் முன்பு குழந்தைகட்கு ஒர் அழகான கடிதம் எழுதினர் அல்லவா ? அக்கடிதத்தில் மிளிரும். குழந்தைத் தன்மையினை இன்று நினைத்துப் பார்த்தா லும் நமக்குள் மகிழ்ச்சி தோன்றவில்லையா ? 'ஆ ! எனக்கு இறக்கை மட்டும் இருந்தால்' என்று எழுதிய அக்கடிதத்தில் குழந்தைத் தன்மைதான் காணப்படு கிறது. என் ஆசிரியர் மணிதிருநாவுக்கரசு முதலியாரின் தந்தையாரை நான் ஒருமுறை உங்களுக்கு இப்போது என்ன வயது" என வினவினேன். அவர் உடனே நிமிர்ந்து உட்கார்ந்து புன்னகை தவழ்ந்த தம் பொக்கை வாயினை ஆவலோடு திறந்து, நான் இப் போது பதினுறு வயது பாலகுமாரன்” என்று மார்பைத் தட்டிக் கொண்டு கூறினர். நான் உடனே "அஃ தெப்படி ' என்றேன். அதற்கு அவர், 'மனித னுக்கு அறுபது வயதிற்கு மேல் குழந்தைப் பருவம் திரும்புகிறது . எனக்கு இப்போது எழுபத்தாறு : ஆதலால் நான் பதினறு வயது பாலகுமாரன்" எனருா. அப்பெரியாரின் கொள்கைப்படி நம் திரு. வி. க. முதலியார் இப்பொழுது ஓராண்டு நிறைவுபெற இருக் கும் இளங்குழந்தையே ஆவர். இப்பொழுது நடை பெறுவது அக்குழந்தையின் முதல் ஆண்டு விழா.