உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கித்திலக் கட்டுரைகள் அக்குழந்தையின் அழகு முதிர்ந்த இன்ப வடிவினைக் கண்டு மகிழ நாம் பெரிதும் அவாவுகின்ருேம். அறிவு முதிர்ந்த அக்குழந்தையின் அமுதமொழியினைக் கேட்க நாம் ஆவல் கொண்டுள்ளோம். அவர்தம் துாய உள்ளம் என்றும் துகளின்றி மிளிர்வதாக அவர்தம் குண நலன்கள் மேன்மேலும் ஓங்கி ஒளிர்வதாக ! அவர்தம் எழில் வாய்ந்த திருவதனம் என்றும் இளமையுடன் திகழ்வதாக பல்லாண்டு பல்லாண்டு அவர்தம் திருப்பெயர் என்றும் பொன்னெழுத்துக் களால் பொலிவுறுவதாக ஒப்புயர்வற்ற அவர்தம் கொள்கைகள் எங்கெங்கும் பரவி என்றென்றும் நிலவு வதாக தமிழ்நாட்டுப் பெரியார் திரு. வி. கலியான சுந்தர முதலியார் வாழ்க !