90 கித்திலக் கட்டுரைகள் தக்க மானம் எய்தும் சமயம் வரின் உடனே உயிர் துறப்பர். தணிகைநாதர் : அப்படியானுல் அந்தக் கடன் கார ண் தற்கொலை புரிந்து கொண்டது நியாயம் என்று நீங்கள் சொல்லுகின்றீர்களா ! புனிதவேலர் : அதில் என்ன சந்தேகம் ! திருவள் ளுவர் அப்படித்தானே சொல்லுகிருர் ? நாதனுர் : போமையா போம். திருவள்ளுவர் சொன்னுல் என்ன ? யார் சொன்னுல் எனக்கென்ன? வந்ததை வைத்துக்கொண்டு ஒழுங்காகக் குடித்தனம் பண்ணுமல் ஊரெல்லாம் கடன் வாங்கிக் கொண்டு தற். கொலை பண்ணிக் கொண்டவன் பெரிய மானியா ? மானம் உடையவனுய் இருந்தால் முன்பே கடன் வாங் காமல் காலம் தள்ளமாட்டானு ? வேலனர் ஆளுல் திருவள்ளுவர் வாய்மொழி பொய்யா ? நாதர்ை : அதை யார் பொய் என்று சொன்னர் ? இவனுக்காகவா திருவள்ளுவர் இந்தப் பாட்டை எழுதி வைத்தார் ? மானமாக வாழ்ந்து எதிர்பாராத வகையில் தம் மானத்தை இழக்க நேரும் நிலையில் உள்ளோரைக் குறித்து வள்ளுவர் அவ்விதம் எழுதினர் என்ருல் ஒரு வகையில் பொருந்தும். வேலனர் . அப்படியால்ை நன்ருகப் படித்து வந்த ஒரு கல்லூரி மாணவன் எதிர்பாராத வகையில் பட்டம் பெறத் தவறி விடுகின்ருன் என்று வைத்துக் கொண்டால் அவன் தன் மானத்தைக் காத்துக்கொள் ளத் தற்கொலை செய்து கொள்ளலாமா ?
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/96
Appearance