பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவரிமா அன்னர் 91 நாதர்ை : அந்த மாணவன் அவ்விதம் உயிர் துறந்தால் அவன் அறிவில்லாதவனே ஆவான். தேர் வில் வெற்றியும் தோல்வியும் இயல்பு. நன்ருகப் படித்து விளக்கமாக விடை எழுதுபவன் பட்டம் பெறு வான். அவ்விதம் புரியாதவன் பட்டம் பெறத் தவறி விடுவான். நீங்கள் கூறும் மாணவன் ஒழுங்காகக் கற்று விளக்கமாக எழுதியும் பட்டம் பெருவிட்டால் அது தேர்வாளர் தவறே ஆகும். அதற்காக இவன் ஏன் தன் அருமையான உயிரை இழக்கவேண்டும். வேலஞர் : நீங்கள் கூறுவதைப் பார்த்தால் எவ னும் தன் உயிரைப் போக்கிக் கொள்ளக் கூடாது போல் தோன்றுகிறது. அவ் விதமானுல் அந்தக் குறட்பா வே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். நாதனுர் : உயிரைப் போக்கிக் கொள்ளுதற்கு எவ ருக்கும் உரிமையில்லை. அதனுல் தானே அவ்விதம் புரிய முயல்வோரை அரசாங்கத்தார் தண்டிக்கின்றனர்? அரசாங்கம் மட்டும் அன்று ; இறைவன் கூட விரும்புவ, தில்லை. "ஆதலால் அஞ்சுகின்றேன். அதுவும் நின் உடைமை அன்றே ' என்று ஒரு பெரியார் தம்உயிமை மாய்த்துக் கொள்ளவும் இயலாமல் கடவுளே. நோக்கிக் கூறியிருத்தல் நீங்கள் அறிந்ததுதானே. வள்ளுவர் தற்கொலை புரிந்து கொள்ளும்படியாகவா கூறியிருக் கின்ருர், "உயிர்விடுவர் மானம் வரின்” என்பதற்குப் பொருள் அந்த உயிர் தானே உடலை விட்டு நீங்கிவிடும் என்பதே ஆகும். சிலப்பதிகாரத்திலே வரும் பாண் டியன் நெடுஞ்செழியனை நோக்குங்கள் ; அவன் பொற் கொல்லன் சொற்கேட்டுக் கோவலனைக் கொலை புரிந்