பக்கம்:நித்திலவல்லி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

99


“இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்?”

“கணிகை மாளிகைக்கு...”

அவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும் ‘ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்?'- என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது.


14. கண்களே பேசும்

மீண்டும் நிலவறை இருளில் புகுந்து அவர்கள் மூவரும் புறப்பட்டனர். மூன்று குழிகள் உள்ள இடம் வந்ததும், வழியில் திரும்பிக் கணிகையர் மாளிகை வாயில் உள்ள பக்கமாக அழைத்துச் சென்றான் அழகன் பெருமாள். கணிகை மாளிகை வழி அருகில் வந்ததும் பத்துப் பன்னிரண்டு படிகள் செங்குத்தாக மேல் ஏறிப்போக வேண்டியிருந்தது! முதலில் அழகன்பெருமாள் தான் படியேறினான். தொடர்ந்து குறளனும் பின் இளையநம்பியும் சென்றனர். அழகன் பெருமாளிடம் பலவற்றைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்க நினைத்தும் அந்தக் கணிகை மாளிகை பற்றித் தான் எது கேட்டாலும் அழகன் பெருமாள் அதை ஏளனமாக எடுத்துக் கொண்டு வருந்தவும், உள்ளூரச் சினமடையவும் நேருவதை உணர்ந்து மெளனமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் இளையநம்பி.

படியேறியதும் அந்த இடத்தில் எங்கிருந்தோ கம்மென்று பொதியமலைச் சந்தனம் மணந்தது. அழகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/100&oldid=715265" இலிருந்து மீள்விக்கப்பட்டது