பக்கம்:நித்திலவல்லி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

நித்திலவல்லி / முதல் பாகம்


கேள்விப்பட்ட பரபரப்பான செய்திகளாலும் யாருக்குமே உறக்கம் வரவில்லை.

இரவு நடுச்சாமத்திற்கு மேலும் ஆகிவிட்டது. திருஷ்டி வாசல் கதவு கண்ணில் தெரியும்படியான ஓரிடத்தில் இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் அமர்ந்து அந்த வாயிற்புறத்திலேயே பார்வையைப் பதித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகஆக அவர்கள் மனத்தில் சந்தேக நிழல் படரத் தொடங்கியது. இரத்தின் மாலையும் திரும்பவில்லை. காரி முதலிய நால்வரும் கூட எதிர்பார்த்தபடி அங்குவந்து சேரவில்லை.

அதுவரை எல்லா விஷயங்களிலும் அளவற்ற நம்பிக் கையோடு இருந்த அழகன் பெருமாள்கூட-

“நண்பர்கள் ஏன் இன்னும் வரவில்லை? இறைவன் அருளால் அவர்களுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது நேர்ந்திருக்க முடியாது.” என்று தானாகவே முன்வந்து இளையநம்பியிடம் கூறினான். அப்படிக் கூறியபோது அந்தக் குரலில் தளர்ச்சி தொனிப்பதையும் இளையநம்பி உணரத்தவறி விடவில்லை.


21. எண்ணெய் நீராட்டு

அந்தப் புதிய விருந்தினனை அறக் கோட்டத்தில் தங்க வைத்து விட்டு வந்திருந்த காராளர் இப்போது பெரியவர் மதுராபதி வித்தகர் கூறிய பரிசோதனையை அவனிடம் எவ்வாறு செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினார் வந்திருப்பவனின் மனம் புண்படாமல், தனக்கு ஆகவேண்டிய காரியமும் பழுது படாமல் எப்படி முடித்துக்கொள்வது என்று தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/131&oldid=716217" இலிருந்து மீள்விக்கப்பட்டது