பக்கம்:நித்திலவல்லி.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
203
 


குறுக்கே நீந்தி, நீரைக் கடந்து, மறைந்து வந்து உப வனத்து நிலவறை முனையில் இறங்கி இவ்விடத்தை அடைந்தேன். உப வனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இப்படி ஒரு நிலவறைப் பாதை தொடங்குமென்று பூதபயங்கரப் படையினருக்குச் சந்தேகம் இருக்குமானால், வனம் முழுவதும் படை வீரர்களை நிரப்பிக் காவல் செய்திருப்பார்கள்.”

“அப்படியானால் இப்போது உப வனத்தில் கடுமையான காவல் இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவில்லையே! அந்தக் கடுமையான காவலை நான் ஏமாறச் செய்து விட்டு வந்திருக்கிறேன் என்பதனால் காவலே இல்லை என்று ஆகிவிடாது...” என்று கொல்லன் கூறிக்கொண்டிருக்கும்போதே-

“காவல் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி"--என்பதாகத் தேனூர் மாந்திரீகன் குறுக்கிட்டுச் சொன்னான். “பாதுகாப்பும், கட்டுக்காவலும் அகநகரில் வெள்ளியம்பலத்து முனையில் கடுமையாக இருக்கும். நம் தேனூர் மாந்திரீகன் செங்கணான் கூறுவதிலிருந்து, பாண்டிய வேளாளர்கள் வசிக்கும் சுற்றுப்புறத்துச் சிற்றூர்களையும் களப்பிரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்! பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லாமற் போனதற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்"- என்று அழகன்பெருமாள் கூற முற்பட்டான். புதியவன் வாயிலாக நிலைமைகளை அறிய முற்படும் தன்னிடம், செங்கணானும் அழகன்பெருமாளுமே நிலைமைகளைக் கூற முற்படவே, இளையநம்பிக்கு அவர்கள் மேல் கோபமே வந்தது. அழகன்பெருமாளையும், செங்கணானையும் உறுத்துப் பார்த்தான் அவன். அந்தப் பார்வை அவர்கள் பேச்சைத் தடுத்தது. அவர்கள் பேச்சு நின்றதும், “இத்தகைய சூழ்நிலையில் உயிரைப் பொருட்படுத்தாமல் ‘நீ இங்கே எங்களைத் தேடி வந்திருக்கிறாய் என்றால் அதற்குரிய காரியம் ஏதேனும் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்” -- என்று அவன் திருமோகூர்க் கொல்லனை நோக்கிக்