பக்கம்:நித்திலவல்லி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

247



அவன் தோல்வியடையத் தொடங்குகிறான் என்பதுதான் பொருள்.”

“உங்களுக்கே மதுராபதி வித்தகன் மேல் கோபம் வருகிறதே?”

“அதனால்தான் நான் அவனை இன்னும் வெல்ல முடியவில்லை. என் கோபம் பல முறை தோற்றவனுக்கு வரும் கோபம். என் எதிரே, இந்தக் கோபம் என்று அந்த மதுராபதி வித்தகனுக்கு வந்து, அவன் முதலில் ஆத்திரத்தால் நிலை தடுமாறுகிறானோ அன்று நான் வென்றவனாக இருப்பேன்.”

“ஆகவே, நாம் முதலில் அந்த மூல விருட்சத்தை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்...”

“ஆம்! ஆனால் எப்படி அழிப்பது என்பதில்தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம்.”

“நம்மால் எப்படியும் அழிக்க முடியும்!”

“நீங்கள் எப்படி அழிப்பீர்கள் என்பது வாதமில்லை. அவன் எப்படி அழிவான் என்பதே நம் வாதமாக இருக்க வேண்டும்.”

“ஒவ்வொருவரும் முடிவதற்கு ஏதாவது ஒரு தலைவிதி இருக்கும் அடிகளே!”

“மதுராபதி வித்தகன் யாரோ ஏற்படுத்திய விதிகளுக்குத் தான் கட்டுப்படுவதில்லை. விதிகளையே ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வல்ல அறிவு அவனுக்கு இருந்து தொலைக்கிறது.”

“அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று சொல்ல முடிந்தால் போதும்! மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“எந்த இடத்தில் அவன் இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொண்டு செயல் படுவதற்குள் அவன் வேறு இடம் மாறிவிடுவான். அவ்வளவு சுலபமாக அகப்பட்டு விடுகிறவனில்லை அவன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/246&oldid=946362" இலிருந்து மீள்விக்கப்பட்டது