பக்கம்:நித்திலவல்லி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

249


கொள்ள முடிந்தால் களப்பிரர்களுக்கு எதிரான பகை வேரோடியிருக்கும் மூல விருட்சம் எது என்றும், எங்கே என்றும் நானே காண்பேன்” என்று சூளுரைத்தார் மாவலி முத்தரையர். சிறைப்பட்டவர்களை உடன் அங்கே கொண்டு வருமாறு பூத பயங்கரப் படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான் கலிய மன்னன். உடனே பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக்கு விரைந்தான். அவன் புறப்பட்டுச் சென்றதும் படை நிலைமைகள் பற்றி அங்கே அமர்ந்திருந்த நால்வகைத் தானைத் தலைவர்களையும் கேட்டறிய முற்பட்டான் களப்பிரக் கலிய மன்னன்.


4. காம மஞ்சரி

சிறிது நேரத்திலேயே சிறைப் பட்டிருந்த நால்வரையும் ஒவ்வொருவராக அந்த மந்திராலோசனைக் குழுவினரின் முன் கொண்டு வந்து நிறுத்தினான் பூத பயங்கரப் படைத் தலைவன்.

முதலில் ஒரு வேங்கைப் புலியை இரும்புச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்து வருவது போல், தென்னவன் மாறனை இழுத்து வந்தார்கள். அடுத்துக் காண்பவர்களைப் பயமுறுத்தும் பூதாகரமான தோற்றத்தோடு திருமோகூர் அறக்கோட்டத்து மல்லன் இழுத்து வரப்பட்டான். அவனைத் தொடர்ந்து அகநகரில் அவிட்ட நாள் விழாவன்று சிறைப்பட்டவர்கள் வந்தனர்.

அாச குரு மாவலி முத்தரையர் தம் இருக்கையிலிருந்து எழுந்து சிறையிலிருந்து கொண்டு வந்து நிறுத்தியவர்களை நெருங்கிக் கூர்ந்து கவனிக்கலானார். ஒவ்வொருவராகச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பது, அங்கம் அங்கமாக அளந்தெடுப்பது போல் பார்த்து விட்டு மீண்டும் திரும்பி வந்து, ‘தென்னவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/248&oldid=946419" இலிருந்து மீள்விக்கப்பட்டது