பக்கம்:நித்திலவல்லி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



மாறன்’ அருகிலேயே நிலைத்து நின்று அவனை வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கலானார் அவர்.

“இந்தப் பிள்ளையாண்டானை எங்கே சிறைப் பிடித்தாய்?” என்று மாவலி முத்தரையர், பூத பயங்கரப் படைத் தலைவனைக் கேட்டவுடனே, அவன் ஒரு சிறிதும் தயங்காமல், “இவனையும், அதோ அந்த முரட்டு மல்லனையும் திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு முன்றிலில் சிறைப் பிடித்தோம்” என்று மறுமொழி கூறினான்.

மேலும் சில விநாடிகள், தென்னவன் மாறனின் முகத்தையே ஏதோ வசியம் செய்வதற்குப் பார்க்கிறவர் போல் இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றார் மாவலி முத்தரையர்.

பின்பு நிதானமாகத் தம்முடைய பாதக் குறடுகள் ஒவ்வொரு முறை அடி பெயர்ந்து வைக்கும் போதும், நடைக்குத் தாளமிடுவது போல் ஒலிக்க நடந்து கலிய மன்னனின் அருகே சென்று கூறலானார்:-

“இந்த நால்வரில் இதோ புலித் தோல் அங்கி அணிந்திருக்கிறானே; இவனிடம்தான் சாமுத்திரிகை இலக்கணத்துக்குப் பொருந்திய சாயல்கள் உள்ளன. இவர்களில் இவன் அரச மரபைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்பது என் ஐயப்பாடு ஆகும்...”

“ஆம்! என் சந்தேகமும் அதுதான்! இந்த அரண்மனையின் பழமையான ஓவிய மாடத்தில் உள்ள பல பாண்டிய இளவரசர்களின் ஓவியங்கள் எப்படி இருக்கின்றனவோ, அப்படியே இவன் தோற்றமும் இருக்கிறது. இவனைச் சிறிதும் தாமதியாமல் சிரச்சேதம் செய்தால் என்ன மாவலி முத்தரையுரே?”

“கூடவே கூடாது! ஆத்திரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே கலியா! ‘கைக்காடையை விட்டுக் காட்டுக் காடைகளைப் பிடிக்க வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. இவனை வைத்து இவனோடு சேர்ந்தவர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/249&oldid=946365" இலிருந்து மீள்விக்கப்பட்டது