பக்கம்:நித்திலவல்லி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

289


நினைத்தான். துன்பங்களினால் சிறிதும் கலக்கமே அடையாத அந்த நிலை, அவனை மெய் சிலிர்க்கச் செய்தது.

“பேரரசுகளின் நடுவே இப்படிப்பட்டவர்கள் பிறப்பதில்லை! இப்படிப்பட்டவர்கள் பிறந்த பின்புதான் ஒரு பேரரசே பிறக்கிறது", என்று இதயத்தில் அவரை வியந்தபடியே அவன் திருமோகூர் திரும்பினான். திருமால் குன்றத்திலிருந்து காட்டுப் பாதையாகச் சுருங்கிய வழி இருந்ததனால், பிற்பகலிலேயே அவன் திருமோகூரை அடைந்து விட்டான். முதலில் தன் உலைக் களத்திற்குச் சென்றான் கொல்லன். சிறிது நேரத்திற்குப் பின், பெரியகாராளர் மாளிகைக்குச் சென்றான் அவன். அங்கே பூத பயங்கரப் படை வீரர்கள் சிலர் காவலிலிருந்தாலும், அவனைத் தடுக்கவோ, கேட்கவோ இல்லை. பெரியவர் சொல்லியிருந்த கொற்கை மனிதனைச் சந்திக்க இன்னும் நேரம் இருந்ததால்தான், முதலில் அவன் இங்கே வந்திருந்தான்.

அப்போது காராளர் வீட்டில் இல்லை. கழனிகளை மேற்பார்க்கச் சென்றிருப்பதாகக் காராளர் மனைவி கூறினாள். அவர் வெளியே சென்று வரத் தடை இல்லை என்பதைக் கொல்லன் இப்போது புரிந்து கொண்டான்.

அடுத்த கணமே செல்வப் பூங்கோதை ஒவியம் போல் அடக்கமாக, அவனை எதிர் கொண்டாள். காராளர் மனைவியும் உடனிருந்ததால் அந்த அம்மையாருக்குச் சந்தேகம் எழாமல் “கூடலில் தெய்வத்தை கண்டு வணங்கும்போது தங்கள் வேண்டுதலைச் சேர்த்தேன் அம்மா! இதோ பிரசாதம்!”, என்று அந்தத் தாழம்பூச் சுருளை எடுத்துச் செல்வப் பூங்கோதையிடம் சாதுரியமாக அளித்தான், கொல்லன். செல்வப் பூங்கோதையும் அதைப் புரிந்து கொண்டாள். அவள் கொடியாக வாடித் துவண்டு போயிருப்பது அவனுக்குப் புலப்பட்டது. அன்பு, மனிதர்களை எந்த அளவு தவிக்கச் செய்யவும் முடியும் என்பதை அவன் கண் கூடாகக் கண்டான். ஆறுதலாக இருக்கட்டும் என்று கருதி, அவனே மீண்டும், “தெய்வம் கை விடாது அம்மா! நல்ல காலம் விரைவில்

நி.வ-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/288&oldid=946443" இலிருந்து மீள்விக்கப்பட்டது