பக்கம்:நித்திலவல்லி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


டிருப்பதையும் கொல்லன் கண்டான். பெண்களைக் கவரும் கம்பீரமான ஆண்மைக் குரல், அந்த விடலை இளைஞனுக்கு இல்லை. அவன் குரல் இனியதாகவும், மிருதுவாகவும் தாழ்ந்தும் ஒலித்தது. அவன் முகத்திலும் கூடப் பெண்மைச் சாயலே அதிகம் புலப்பட்டது. அவனருகே நெருங்கிய கொல்லன்:

“என்ன வேண்டும் உங்களுக்கு? என்னைக் கேட்டால் மறுமொழி சொல்ல முடியும்!” என்று தானாகவே அவனை அணுகி வினவினான்.

“ஒன்றுமில்லை ஐயா! இந்தப் ‘பெட்டைப் பயல்'களுக்கு இருக்கிற கர்வத்தைப் பாருங்களேன்! கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடிக்கு வழி கேட்டால் வழி கூறாமல் சிரிக்கிறார்கள்”, என்ற தொடரும் இவனைச் சிந்திக்க வைத்தன. சில கணங்கள் தயங்கியும், சிந்தித்தும் முடிந்தபின்,

“ஆனாலும் உள்ளூரில் வருவது போல வெளியூரில் உங்களுக்கு இப்படிக் கோபம் வரக் கூடாது. என்னோடு வந்தால் அந்த இடத்தை உங்களுக்குக் காட்ட முடியும்” - என்று கூறி விட்டு அவன் தன்னைப் பின் தொடர்வதையும் உறுதி செய்து கொண்ட பின் விரைந்து நடந்தான் கொல்லன்.


13. பெருஞ்சித்திரன்

காதோரங்களிலும் பிடரியிலும் கருகருவென்று அலையலையாகச் சுருண்ட குஞ்சியின்[1] அழகும், அவனுடைய இளம் முகத்தின் பெண்மைச் சாயலையே மிகைப்படுத்திக் காட்டுவதை அசைப்பிலே திரும்பிப் பார்த்துக் கவனித்தான் கொல்லன். கொற்றவைக் கோயிலிலே வன்னி மரத்தடியில் அன்று மாலை விளக்கு வைக்கிற நேரத்திற்குத் தான் யாரைச்


  1. குடுமி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/297&oldid=946502" இலிருந்து மீள்விக்கப்பட்டது