பக்கம்:நித்திலவல்லி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

301


கொல்லனிடம் கொடுத்தான். முத்துகள் கைக்கு வந்ததும், மேற்கொண்டு தாமதம் எதுவும் செய்யாமல், தன்னைப் பின் தொடருமாறு அவனுக்கு சைகை காட்டி விட்டு நடந்தான் கொல்லன். அந்த இளைஞனும் மறு பேச்சுப் பேசாமல் கொல்லனைப் பின் தொடர்ந்தான்.

ஊர் எல்லையைக் கடந்து அடர்ந்த காட்டுப் பகுதி வருகிற வரை விரைந்து நடப்பதைத் தவிர இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ‘அபாய எல்லையைக் கடந்து விட்டோம்’ என்ற நம்பிக்கை வந்த பின்பு கொல்லன் அந்த இளைஞனை விசாரித்தான்:

“ஐயா! இன்னும் ஐந்தாறு நாழிகைப் பயணம் போக வேண்டும். உங்களுடைய பசி, தாகம், எப்படி? நிலைமைகள் எனக்குத் தெரிந்தால் நல்லது.”

அந்தப் பிள்ளையாண்டான் தன் வயதிற்கு மிகவும் இளைஞனாகத் தோன்றினாலும், பெரியவரைத் தேடிக் காண வந்திருக்கும் சிறப்பு நோக்கி, அவனுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்தே விளித்துப் பேசினான் கொல்லன்.

“ஆம்! எனக்குப் பசிக்கிறது!... பகலில் சிறிது அவலும் இரண்டு பொரிவிளங்காய் உருண்டையும் சாப்பிட்டேன். என்னிடமே இன்னும் மூன்று நான்கு வேளைக்குப் போதுமான அவலும் பொரிவிளங்காயும் இருக்கும். நீர் பருக ஏற்றாற்போல் ஒடையோ, காட்டாறோ குறுக்கிட்டால், அங்கே அமர்ந்து உண்ட பின், பயணத்தைத் தொடரலாம்” என்று அவன் மறுமொழி கூறவே, ஒர் ஒடையின் கரைக்கு அவனைக் கொல்லன் அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.

அந்த முன்னிருட்டு வேளையில் ஒடையின் கரையில் ஒரு பாறை மேல் அமர்த்தி அவனை உண்ணுமாறு வேண்டினான் கொல்லன். அவன் கொல்லனிடம் பேச்சுக் கொடுத்தான்:

“வேறு எந்த உணவானாலும் பருக நீரின்றிக் கூட உண்டு விடலாம் ஐயா! இந்த அவலை மட்டும் அப்படி உண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/300&oldid=946512" இலிருந்து மீள்விக்கப்பட்டது