பக்கம்:நித்திலவல்லி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



எல்லாரும் பசிக் களைப்போடு இருந்தாலும் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பி விட்டோம் என்ற மன நிறைவு புதிய தெம்பைக் கொடுத்திருந்தது.

சில கணங்களுக்குப் பின் அழகன் பெருமாள், தேனூர் மாந்திரீகன் செங்கணானை நோக்கி, “செங்கணான்! காரியத்தைக் கவனிக்கலாம்! தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் அடைப்பட்டிருக்கும் பாதாளச் சிறை இப்போது இங்கே நாம் நின்று கொண்டிருக்கும் தளத்திற்கு கீழே இருக்கிறது என்றாய்! அதோடு நாம் நிற்கும் இந்தக் கல் தளத்தில் எங்கோ ஒர் கோடியில் சிறைக்குச் செல்லும் படிக்கட்டு ஒன்று இருப்பதாகவும் என்னிடம் இரகசியமாகத் தெரிவித்தாய்! அந்தப் படிக்கட்டை அடைவதற்கு, எந்த இடத்தில் தளத்தின் மேற்பகுதிக் கற்களைப் பெயர்க்க வேண்டும் என்பதை வந்து காட்டு!” எனக் கட்டளையிட்டான். மாந்திரீகன் மைச்சிமிழை மீண்டும் எடுத்துப் பார்த்து விட்டுச் சிறிது சிந்தித்த பின் ஈசானிய மூலையில், இரண்டு வரிசையான அடுத்தடுத்த தளக் கற்களை அவற்றின் மேல் நடந்து காட்டி அடையாளம் சொன்னான்.

உடனே அழகன் பெருமாள் தன்னோடு இருந்தவர்களை அருகில் கூப்பிட்டு, அதிக ஒலி எழாமல் அந்த இரு தளக் கற்களைத் தூக்கி நகர்த்துமாறு உத்தரவிட்டான். அவர்கள் மூச்சு திணறும்படி முதற் கல்லைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். மூச்சு இரைக்கும் அந்த ஒலி கூடக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது அழகன் பெருமாளுக்கு. சிறிது நேரத்தில் முதற் கல்லைப் பாதி நகர்த்தி விட்டார்கள் நண்பர்கள். கீழே இறங்கும் படிக்கட்டுகள் கூடத் தெரிந்தன. பாசி படிந்து வழுக்கலாக இருந்த முதற் படியைக் கை நீட்டித் தொட்டுப் பார்க்கக் கூட முடிந்தது.

அந்த நேரம் பார்த்து, வெளியே வீரர்கள் புடை சூழ, மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் துழைந்து, இவர்கள் இருந்த சிறைக்கோட்டக் கதவைத் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/331&oldid=946548" இலிருந்து மீள்விக்கப்பட்டது