பக்கம்:நித்திலவல்லி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

337


தார். வலிமையும் கம்பீரமும் வாய்ந்த சிங்கம் ஒன்று, காட்டில் தனியே நின்று கொண்டிருப்பது போல் அந்த நிலையில் அவர் காட்சியளித்தார். நேர் எதிரே அம்பு பாய்வது போல் பார்க்கின்ற அந்தப் பார்வையும், சூழ இருந்த மலையின் பசுமை அடர்த்தியும், பாறைப் பிளவாகிய குகை வாயிலும் சேர்ந்து, அப்போது அவரைச் சிங்கத்தோடு ஒப்பிடுவதற்கு மிகவும் பொருத்தம் அளித்தன.

சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே திரும்பி, பாறைப் பிளவில் மிகவும் பத்திரமாக மறைத்து வைத்திருந்த ஒலைப் பெட்டியை எடுத்து, அதில் முடிச்சுப் போல் தென்பட்ட பட்டுத் துணிப் பொதியை அவிழ்த்து ஒன்பது முத்துகளையும் கூர்ந்து கவனித்தார். உருண்டு திரண்டு அளவில் சற்றே பெரியனவாகவும், நிலவின் ஒளியை உமிழ்வது போல் குளிர்ந்த கதிர் விரிப்பனவாகவும் இருந்த அந்த வெண்முத்துகளை என்ன காரணத்தாலோ, நெடுநேரம் கண்களை இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பார்த்து முடித்ததும், மீண்டும் அந்த முத்துகளை, அவை இருந்த பட்டுத் துணியிலேயே கவனமாக முடிந்து வைத்தார். பின்பு அதே ஒலைப் பேழையினுள் இருந்து சில தாமிரத் தகடுகளையும், ஒலைச் சுவடிகளையும் எடுத்துத் தனித் தனியே பார்த்தார். பாண்டிய குலத்தின் அரச வம்சாவளியைப் பற்றியும், களப்பிரர்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பின் அந்தப் பழைய பாண்டிய வம்சத்தின் கடைசிக் கொழுந்துகள் எப்படி, எங்கே யார், யாராக எஞ்சியிருக்கின்றனர் என்ற குறிப்புகள் பற்றியும் அந்தச் செப்பேடுகளிலும், ஒலைச் சுவடிகளிலும், மதுராபதி வித்தகரின் தந்தையார், பாட்டனார், முப்பாட்டனார் காலத்துக் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன.

அவற்றைப் பரிசீலனை செய்து பரிசோதனை பார்த்த பின், கைவசம் இருந்த வெற்று ஒலைகளில் எழுத்தாணியால் ஏதேதோ குறித்து, ஒரு கணக்குப் பார்த்தார் மதுராபதி வித்தகர். நாள், நட்சத்திரம், திதி உட்படப் பல பிறப்புக் கணிதக் குறிப்புகள் அந்த ஒலைகளிலே இருந்தன. சில கணிப்புகளை எழுதிய போது மேலே எழுதத் தோன்றாமல் அவர்

நி.வ-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/336&oldid=946553" இலிருந்து மீள்விக்கப்பட்டது