பக்கம்:நித்திலவல்லி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33


உள்ளக் கிளர்ச்சியை அளித்தன. அந்த ஊரை அவன் மிகவும் விரும்பினான்.

பொய்கைக் கரையில் நீராடுவதற்காக மேலங்கியைக் கழற்றியபோது வலது தோளின் செழிப்பான சிவந்த மேற் புறத்தில் மைக்கோடுகளாய் விளங்கிய சங்கு முத்திரையை அவன் தானே ஒரு புதுமையைப் பார்ப்பதுபோல் இன்று பார்த்துக் கொண்டான். அவன் மறந்திருந்த ஒன்றை அதிகம் ஞாபகத்துக்குரியதாகச் செய்துவிட்டார் மதுராபதி வித்தகர். சிறிய வயதில் யாரோ ஒரு பெரியவர் செய்த மங்கல நல்லாசி என்று அவன் மறந்திருந்த ஒன்றை இன்று நிகழ்கால அபாயத்துக்குரியதாகவும் எதிர்கால நன்மைக்குரியதாகவும் பாதுகாக்க வேண்டியதாய்ப் புரிந்துகொள்ள நேர்ந்து விட்டது. ‘இந்த முத்திரையை உடைய ஐவரில் இருவரை ஏன் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றார்கள்? மீதமிருக்கும் தன்னையுள்ளிட்ட மூவருக்கும் இதனால் அபாயங்கள் நேரிடலாம் என்று பெரியவர் கூறுவதற்குக் காரணம் என்ன?’ என்பதை எல்லாம் அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. அவர் கூறியவை யாவும் தனக்கும், அரசிழந்து ஒடுக்கப்பட்டு நலிந்து கிடக்கும் பாண்டியர் பெருமரபிற்கும் நன்மை செய்யக் கூடியனவாகவே இருக்கும் என்பதை நம்பி அவைகளைப் பற்றி மேலும் மேலும் நினைத்து மனத்தைத் குழப்பிக் கொள்வதைத் தவிர்த்தான் இளைய நம்பி.

ஆடைகளை உலர்த்தி அணிந்து கொண்டு அவன் ஆலமரத்திற்குத் திரும்பியபோது மதுராபதி வித்தகரிடம் அவருடைய உயரத்திற்கு சரிபாதி உயரம்கூட இல்லாத சற்றே பருத்த ஒரு நடுத்தர வயது மனிதர் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்தான் திருமோகூர்ப் பெரிய காராளராயிருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் அந்தப் புதிய மனிதர் அவனை நோக்கி முகம் மலர்ந்து கைகூப்பி வணங்கினார். உயர்ந்த குடிப் பிறப்பின் கம்பீரம் அந்த முகத்தில் தெரிந்தது. கண்களில் கருணை

நி.வ - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/34&oldid=715908" இலிருந்து மீள்விக்கப்பட்டது