பக்கம்:நித்திலவல்லி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


றங்கரையையும் விடாமல் கண்காணித்துக் கொண்டிருக்குமாறு, அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்ற ஆபத்துதவிகளுக்கும் கட்டளையிட்டு அனுப்பினார் அவர்.

அவர்கள் சென்ற பின், மீண்டும் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அங்கங்கே பல பகுதிகளில் மறைந்திருந்து உடனே எழுச்சி பெறத் தக்க நிலையிலுள்ள பாண்டியர்களின் படை பலம், ஆயுதங்களின் பலம், சூழ்நிலை எல்லாவற்றையும் மனக் கணக்காகக் கணக்கிட்டு நினைத்துப் பார்த்தார் அவர். அவிட்ட நாள் விழாவன்று இந்தக் கணக்கு எதிர்பாராத விதமாக பொய்த்துப் போனாலும், மிக விரைவில் களப்பிரர்களை அவர்களே எதிர்பாராதபடி, வளைத்து மடக்கிப் பாண்டியர்கள் நாட்டைக் கைப்பற்றலாம் என்று தெளிவாக அவருக்குப் புரிந்தது. சுற்றிலும் மாலை சூழ்ந்து, மலையில் இருட்டிக் கொண்டு வந்தது. அவரது சிந்தனையிலோ, அப்போதுதான் விடிவு தெரிவது போல் இருந்தது. விடியும் என்று நம்பினார் அவர்.


26. எதிர்பாராத அபாயம்

யக்கமும், எச்சரிக்கையும், மாறி, மாறி நிலவும் மனநிலையோடு அழகன் பெருமாள் முதலிய நண்பர்கள் காம மஞ்சரி காட்டிய நிலவறை வழியே வெளியேறி, அதன் மறு முனையாகிய மதுரை மாநகரத்து நடுவூர் வசந்த மண்டபத்து நந்தவனத்தை அடைந்து விட்டனர். மறுமுனையில் தங்களுக்கு முன் அதே வழியாகத் தப்பிய தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் தங்களை எதிர்பார்த்து மறைந்து, அங்கே காத்திருக்கக் கூடும் என்று அழகன் பெருமாள் எதிர்பார்த்தான். அவனும் நண்பர்களும் நினைத்தபடி, தென்னவன் மாறனையோ, மல்லனையோ அங்கே காணமுடியவில்லை. தவிர அந்த நந்தவனப் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/373&oldid=946590" இலிருந்து மீள்விக்கப்பட்டது