பக்கம்:நித்திலவல்லி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

387



“இப்போது செய்வதற்கு மிகப் பெரிய செயல்களும் வாய்த்திருக்கின்றன. உம்மை நம்பித் தேர்ந்தெடுத்துச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டு அனுப்புவதற்குத்தான் இப்போது இங்கு எல்லாரையுமே நான் வரவழைத்திருக்கிறேன்” என்றார் பெரியவர்.

“அப்படியானால் அது எளியேன் பெற்ற பெரும் பேறாக இருக்கும்! தயை கூர்ந்து கட்டளை இட வேண்டுகிறேன்.”

“காராளரே! உடனே நீங்கள் பல்லவர் நாட்டிற்கும், சேர நாட்டிற்கும் திவ்ய தேச யாத்திரை புறப்பட வேண்டும். அரண்மனையிலுள்ள களப்பிரக் கலியரசனை நேரில் கண்டு, அவனுடைய வாழ்த்துகளுடனேயே, அவனிடமே சொல்லி விடை பெற்று உங்கள் திவ்ய தேச யாத்திரையைத் தொடங்க வேண்டும்...”

“ஐயா தாங்கள் மெய்யாகவே அடியேனைத் திவ்ய தேசயாத்திரை போகச் சொல்கிறீர்களா, அல்லது இதுகாறும் பல திங்கட் காலமாகத் தேசப்பணியில் சோம்பி இருந்து விட்டேன் என்பதற்காக இப்படி எள்ளி நகையாடுகிறீர்களா? நாடு இன்றுள்ள நிலையில் அடியேன் எப்படி யாத்திரை போக முடியும்?”

“காராளரே! நான் இப்போது உம்மிடம் விளையாட்டுப் பேச்சாகவோ, உம்மைக் குத்திக் காட்டுவதற்காகவோ, இந்தக் கட்டளையை இடவில்லை. நான் அப்படி எல்லாம் சற்றே சிரித்து மகிழச் சொற்களைப் பயன்படுத்தி, உரையாடுகிற இயல்பு உடையவனில்லை என்பதும் உமக்கே தெரியும். அப்படி இருந்ததும் நீர் என்னிடம் இவ்வாறு கேட்பதைக் கண்டு நான் வியப்படைகிறேன்....?”

“பொறுத்தருள வேண்டும் ஐயா! தங்கள் திருவுளக் குறிப்பை எளியேன் புரிந்துகொள்ளத் தவறி விட்டேன்.”

“சூழ்நிலை நன்றாகக் கனிந்து, நமக்கு இசைவாக இருக்கிறது காராளரே! வடதிசையில் பல்லவர் நாட்டிற்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/385&oldid=946602" இலிருந்து மீள்விக்கப்பட்டது