பக்கம்:நித்திலவல்லி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

389


யன் உங்கள் திவ்ய தேச யாத்திரையைப் பற்றி நிச்சயமாகச் சந்தேகப்படுவான். அவனுக்கும் சந்தேகம் வரமுடியாதபடி ஒர் உபாயத்தை நான் உமக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறேன்.”

“என்ன உபாயம் ஐயா அது?”

“கலியரசனுக்கு முன்பு நெகிழ்ந்த குரலில், கண்களில் நீர் கசிய அழுவது போன்ற தொனியோடு, 'அரசே! நான் களப்பிரப் பேரரசுக்கு எவ்வளவோ நெல் உதவி புரிந்தும், எவ்வளவோ நன்றி விசுவாசத்தோடு இருந்தும், பூத பயங்கரப் படையினர் என் மேல் ஐயுற்று திருமோகூரில் என்னை வீட்டோடு சிறை வைத்தார்கள். சோதனைகளும் பாதுகாவலும் புரிந்தார்கள். எளியேன் பாண்டிய நாட்டு எல்லையில், திருமோகூரில் இருப்பதாலேயேதானே மாமன்னருக்கு, இப்படி என்மேல் ஒரு வீணான சந்தேகம் தோன்ற நேர்ந்தது? ஆகவே, மாமன்னர் மனம் எளியேன் மேல் ஐயப்பட நேரிடாதபடி, இனிமேல் இன்னும் சில திங்கள் காலத்துக்குத் திவ்ய தேசங்களில் யாத்திரை செய்யவும் புண்ணிய தீர்த்தமாடவும், புனிதத்துறை படியவும் நான் முடிவு செய்து புறப்பட்டு விட்டேன். தங்கள் நம்பிக்கையிலும் மதியமைச்சர் மாவலி முத்தரையருடைய விசுவாசத்திலும், இந்த அடிமை தாழ்வாகவோ, குறைவாகவோ, மதிக்கப்பட்டு விடக் கூடாதே என்று கருதியே இப்பயணம்?' என்பதாகப் போய் மன்றாட வேண்டும் நீங்கள்...”

“நல்ல உபாயம்! நிச்சயம் பலிக்கும் சூழ்நிலை இசைவாக இருக்கிறது! இப்போது எதுவும் பலிக்கும்.”

அதன் பின், பல்லவனுக்கும், சேரனுக்குமாக எழுதி முத்திரை இட்ட ஒலைகளைக் காராளரிடம் அளித்து விட்டு, எங்கெங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தனியே நீண்ட நேரம் விவரித்தார் மதுராபதி வித்தகர். பெரியவர் எல்லாவற்றையும் கூறிய பின், “தீர்த்த யாத்திரையை நான் தனியே மேற்கொள்வதா? மனைவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/387&oldid=946604" இலிருந்து மீள்விக்கப்பட்டது