பக்கம்:நித்திலவல்லி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


நிற்கப் போகிறீர்கள்! நாங்கள் திரும்பி வந்து அதைக் காணத்தான் போகிறோம்.”

என்பதாக முடிந்திருந்தது அவள் மடல். பல ஒலைகளில் எழுதி இணைத்து சிறிய சுவடியாகவே ஆக்கி அனுப்பியிருந்தாள் செல்வப் பூங்கோதை. இந்த மடல் இளையநம்பியின் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்திருந்தது.

‘பெண்ணே நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னைப் போல் என்மேல் அன்பு செய்யும் பெண்களிடம் நான் ஒரு போதும் கடுங்கோனாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ள மாட்டேன்’ என்று அந்த ஒலையைப் படித்த உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.

ஒலையைப் படித்து முடித்த இன்பக் கிளர்ச்சிகளிலிருந்து அவன் முழுமையாக விடுபடுவதற்குள், கொல்லன் விரைந்து வந்து மேலும் ஒரு செய்தியைக் கூறினான்:

‘ஐயா! மற்றொரு நல்ல செய்தியைத் தூதன் இப்போதுதான் கொண்டு வந்தான். நம்முடைய இந்த அணிவகுப்புக்கும், ஏற்பாட்டிற்கும் சாதகமான ஒரு செயல் வட திசையில் இப்போது நடந்திருக்கிறது.’


7. இரு வாக்குறுதிகள்

டைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு விளங்கி வந்த பாண்டிய மரபு மீண்டும் தலையெடுக்கும் என்று நம்ப முடிந்த நற்செய்தி முதலில் வடதிசையிலிருந்து திருமால் குன்றத்துக்கு வந்து, அங்கிருந்து ஒர் ஆபத்துதவி மூலம் கணிகை மாளிகைக்குச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/416&oldid=946634" இலிருந்து மீள்விக்கப்பட்டது