பக்கம்:நித்திலவல்லி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


களப்பிரர்களின் கவனம் முழு அளவில் எல்லைகளைக் காப்பதில்தான் திரும்ப முடியும். அந்தச் சமயத்தில், வளர் பிறைக் காலத்தில் ஓர் இரவில் நீங்கள் கோட்டையைக் கைப்பற்றி நம் மீனக் கொடியை, அதிகாலையில் மங்கலமான பிரம்ம முகூர்த்தத்தில் அங்கே ஏற்றி விட வேண்டும். அநேகமாகக் களப்பிரக் கலியரசன் போர் முனைக்குப் போக மாட்டான் என்று தெரிகிறது. அவன் அரண்மனையில் இருந்தால், அவனை அழிப்பதற்கும், நீங்கள் தயங்க வேண்டியதில்லை. எதிரியை அழிப்பதும், போர் அறங்களில் முதன்மையானது. கோட்டையில் நமது கொடி ஏறிய பின், நான் அங்கு வருவேன். அதற்கு முன், நான் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டுக் கேட்க இருக்கும் இரண்டு வாக்குறுதிகளைச் சூரிய சந்திரர்கள் சாட்சியாக எனக்கு அளிப்பதாக, இவ்வோலை கொண்டு வரும் தூதனிடம் மாற்றோலையாகத் திருக்கானப்பேர் நம்பி வரைந்தனுப்ப வேண்டும். அந்த இருவாக்குறுதிகள் என்ன என்பதை நானே பின்பு நேரில் கூறுவேன். இவ்வோலையோடு முதல் முதலாகக் கோட்டையில் ஏற்றப்பட வேண்டிய மீனக் கொடியையும் நானே எழுதிக் கொடுத்துள்ளேன். கொடியைத் தவிர அரண்மனையில் முதல் முதலாக நுழையும் போது, அணிந்து செல்ல வேண்டிய இடைவாளும், உறையும் இதனோடு உள்ளன. இந்த வாளின் நுனியில் வெற்றிகள் குவியும். இந்த வாள் ஒரு பேரரசைப் பல்லாண்டுகளுக்குப் பின்பு மீட்கும் நலத்தை அடையப் போவது என்பதையும் அறிக!’ என்று முடிந்திருந்தது அவர் ஒலை.

இளையநம்பி தூது வந்திருந்தவனிடம் இருந்து அந்தக் கொடியையும், வாளையும் பயபக்தியோடு வணங்கிப் பெற்றுக் கொண்டான். இரத்தினமாலையைக் கூப்பிட்டு ஒலையும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொல்லி வேண்டிப் பெற்ற பின், பெரியவருக்கு மாற்றோலை வரைவதற்கு முன்னால் அவர் கேட்டிருக்கும் அந்த இரு வாக்குறுதிகள் என்னவாக இருக்க முடியும் என்று இளைய நம்பி சிந்திக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/420&oldid=946638" இலிருந்து மீள்விக்கப்பட்டது