பக்கம்:நித்திலவல்லி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

427



“அரச குல நியாயங்கள் கண் இல்லாதவை! ஆனால், என் இதயத்தில் நீ கொலு வீற்றிருப்பதை, எந்த நியாயமும் தடை செய்ய முடியாது...”

“நீங்கள் இங்கிருந்து அரண்மனைக்குப் போய் விடுகிற மறு நாளே இந்த மாளிகை சுடுகாடு போலாகிவிடும், அதன் பின் இங்கே மங்கல வாத்தியங்களின் ஒலி எழாது. நறுமணங்கள் இராது. மாலைகளும் சந்தனமும் மணக்காது. விளக்குகள் இருண்டு விடும். நான் உருகித் தேய்ந்து மாய்ந்து போவேன்...”

“நீ உண்மையில் என்னிடம் இதயத்தைத் தோற்றவளாயிருந்தால், அப்படிச் செய்யக் கூடாது.”

“வாழ முடியாதவர்கள் சாவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கப் போகிறது!”

“நாயகனைப் போர்க்களத்துக்கு அனுப்பும் தமிழ்ப் பெண்கள், அவன் திரும்பும் வரை அவன் நலத்தோடு திரும்பி வர நோன்பிருக்க வேண்டும்.”

“இந்தப் போர்க்களத்தில் என் நோன்பிற்குப் பலன் இராது. நீங்கள் வென்ற மறுகணமே அரியணை என்ற மேட்டில், என் கண்ணுக்கு எட்ட முடியாத உயரத்துக்கு ஓடிப் போய் விடுவீர்கள்.”

“மீண்டும் உன்னிடமே திரும்பி வருவேன்! ஆனால் அது வரை உன் நோன்பின் பலனை எதிர் பார்த்துக் காத்திருக்க, உனக்குத்தான் பொறுமை வேண்டும்.”

“அப்படி எவ்வளவு காலம் நான் பொறுத்திருக்க வேண்டுமோ?”

“அடுத்த பிறவி வரை பொறுத்திருக்க வேண்டும்! இந்தப் பிறவியில் நான் பாழாய்ப் போன அரச குடும்பத்தில் வேறு வழி முறையினரே இல்லாத ஒற்றைக்கொரு வீரனாகப் பிறந்து தொலைத்து விட்டேன் பெண்ணே! அரச பாரச் சுமை என்னை இப்போது விடவே விடாது. அந்த அரச குடும்பத்து நியாயங்கள் நீயே கூறியது போல், உன்னை என்னருகே அமர விடவும் இசையமாட்டா. தயை செய்து இன்னும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/425&oldid=946643" இலிருந்து மீள்விக்கப்பட்டது