பக்கம்:நித்திலவல்லி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

429



“அது எனக்குத் தெரியாது! நான் உங்களிடம் மயங்கிப் போய் உருகுவதை மட்டுமே என் உணர்வுகள் அறிந்திருக்கின்றன. நீங்கள் என்னிடம் முதலில் மயங்காத உறுதிதான், என்னை உங்கள்பால் விரைந்து மயங்க வைத்தது...”

“முன்பு ஒரு முறை நீயே கூறியது போல் பெரிய பூக்களைச் சிறிய நாரினால் தொடுப்பதை ஒத்து, நீ உன் அன்பினால் நுணுக்கமாக் என்னைக் கட்டிவிட்டாய்...”

“கட்டியும் பயனில்லை! அந்தச் சிறிய கட்டை அறுத்துக் கொண்டு பெரிய அரச போகத்தை நோக்கி ஓடி விடப் போகிறீர்கள் நீங்கள்...”

“நான் போகப் போவது உண்மை. ஆனால், நீ கட்டியிருக்கும் மெல்லிய அன்பு நார் அடுத்த பிறவி வரை அறப் போவதில்லை என்று உறுதி கூற ஆயத்தமாயிருக்கிறேன் நான்...”

“இது மெய்யானால், அடுத்த பிறவி வரை உங்களுக்காக மகிழ்ச்சியோடு நோன்பியற்றிக் காத்திருப்பேன்.”

“உன் நோன்பு என்னை எப்போதும் மானசீகமாகப் பாதுகாக்கும் இரத்தினமாலை!”

இதற்குச் சொற்களால் மறுமொழி கூறாமல், பூக்குடலையிலிருந்து ஒரு பெரிய மாலையை எடுத்து வந்து அவன் தோள்களில் சூட்டி, அவனுக்குத் திலகமிட்டாள் இரத்தின மாலை. பின்பு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவனும் புன்னகை புரிந்தான். அவளைத் தழுவிக் கொண்டான். - -

“இந்தப் பொன்னுடலே எக்காலமும் மாலையைப் போல் என் மேனியில் தீண்டிக் குளிர்விப்பதாக நான் பாவித்துக் கொள்வேன் இரத்தினமாலை” என்று அவன் கூறியதை அவள் செவி குளிரக் கேட்டாள். அதன்பின் அன்றும், அதற்கடுத்த நாளும் இணை பிரியாமல் அருகிலிருந்து அவனை உபசரித்தாள் இரத்தின்மாலை. மூன்றாம் நாள் மறுபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/427&oldid=946645" இலிருந்து மீள்விக்கப்பட்டது