பக்கம்:நித்திலவல்லி.pdf/436

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
438
நித்திலவல்லி / மூன்றாம் பாகம்
 

இதயத்திலும் ஏதோ புது மழை பெய்து கொண்டிருக்கிறதடி பெண்னே! இனி என்றும் இப்படியே இரு” என்று அந்த வேளையில் அவளருகே வந்த தாய் அவளை வாழ்த்தினாள். முகத்தில் பரவும் நாணத்தைத் தவிர்க்க முடியாமலும், அந்தரங்கமான உணர்வுகளைத் தாய்க்குத் தெரிய விடாமலும் வேறு புறம் திரும்பித் தலை குனிந்தாள் மகள். தாய் கூறியது போலவே தன் இதயமாகிய நிலத்தில் ஏதோ புது மழை பெய்து குளிர்விப்பதை அவளும் அப்போது புரிந்து கொண்டுதான் இருந்தாள்.


10. அளப்பரிய தியாகம்

பெரியவர் மதுராபதி வித்தகர் தன் சார்பில், சேர வேந்தனிடம் ஒப்புக் கொண்டிருக்கும் நிபந்தனை என்னவாக இருக்கும் என்று எண்ணித் தயங்கவோ, அஞ்சவோ செய்யாமல் முழு மனத்தோடு அதையும் ஏற்றுக் கொண்டான் இளையநம்பி. உடனே திருமால் குன்றத்திலிருந்து பெரியவர் அனுப்பியிருந்த தூதனிடம், ‘ஐயா! தாங்கள் சேரனுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை, என் வாக்குறுதியாகவே கருதி நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் பாண்டிய நாட்டின் எதிர்கால நன்மைதான் அடிப்படையாயிருக்கும் என்பதை எளியேன் நன்கு அறிவேன்’ என்று விநயமாகவும், வணக்கத்துடனும் மறுமொழி ஒலை எழுதிக் கொடுத்தனுப்பி விட்டான் அவன்.

பெரியவரிடம் இருந்து வந்த தூதன் மறுமொழி ஒலையோடு திரும்பிச் சென்ற பின், கீழேயுள்ள நிலவறையில்