பக்கம்:நித்திலவல்லி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



அதன் பின்பு பிற்பகல் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து உரையாடிக் கொள்ள வாய்ப்பின்றியே கழிந்தது. முன்னிரவின் தொடக்கத்திலேயே இளைய நம்பியால் திருமோகூர் அனுப்பப்பட்டிருந்த கொல்லன் திரும்பி வந்து சேர்ந்திருந்தான்.

“ஐயா! தங்கள் ஒலையைக் காராளர் திருமகளிடம் சேர்த்து விட மட்டுமே முடிந்தது. ஒலையைக் காராளர் மகள் படித்தறிகிற வரை காத்திருந்து மறுமொழியோ, மாற்று ஒலையோ தரச் சொல்லிப் பெற்று வர நேரமில்லை. நான் காலந் தாழ்த்தாமல், உடனே இங்கு திரும்பி வர வேண்டும் என்று தாங்கள் கட்டளை இட்டிருந்ததைக் கருதித்தான் விரைந்து திரும்பி விட்டேன். இங்கு நான் வந்து, நிலவறையிற் படியேறி மேலே வரும் போதுதான் ஏற்கெனவே காராளரும், கொற்கைப் பெருஞ்சித்திரனும், இங்கு வந்து சேர்ந்திருப்பதாக நம் வீரர்கள் கூறினார்கள்" என்றான் திருமோகூர் கொல்லன். காராளர் மூலம் அறியக் கிடைத்த பெரியவரின் கட்டளைகளை எல்லாம் கொல்லனிடமும் விவரித்தான் இளையநம்பி. கொல்லனும் அவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டபின்,

“அகநகரின் புறத்தாக்குதலைத் தாங்கள் தலைமை நடத்துவது காரணமாகத் தங்களுக்கு அபாயம் எதுவும் நேரிட்டு விடக் கூடாதே என்று கருதித்தான் பெரியவர் கொற்கைப் பெருஞ்சித்திரனை அதற்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் போலும்” என்று சொன்னான். உடனே அதற்கு இளையநம்பியிடமிருந்து பதில் வந்தது.

“இது உன் அநுமானம் என்று நினைக்கிறேன்...”

“ஆம் ஆனால் இந்த அதுமானத்தில் பிழையிருக்காது என்பது மட்டும் உறுதி” என்று மீண்டும் தீர்மானமாக அழுத்திச் சொன்னான். இளையநம்பி அவனிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“ஆமாம், இந்தப்பெருஞ்சித்திரன் கொற்கைக் குதிரைக் கோட்டத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/448&oldid=946671" இலிருந்து மீள்விக்கப்பட்டது