பக்கம்:நித்திலவல்லி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

455


பெயரையே கூவி அரற்றிக் கொண்டு, தெருக்களில் திரிந்தான். திருமோகூரில் உன் தந்தையோடு அமர்ந்து விருந்துண்ண மாளிகைக்குள் வந்த போது, அன்று முதன்முதலாக நீயும், உன் தாயும் என்னை மங்கல ஆரத்தி எடுத்து வரவேற்றீர்கள். அப்போது, நீ என்னை நோக்கிச் சிரித்த சிரிப்பைக் கண்டு, எனக்கு அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தனின் காதல்தான் நினைவு வந்தது. உன் சிரிப்பில் எங்கே நான் பித்தனாகி விடுவேனோ என்று கூட அஞ்சினேன். அந்தத் திருக்கானப் பேர்ப் பித்தனைப் போல் நான் தெருவில் எல்லாம், உன்னைப் பெயர் சொல்லிக் கூவித் திரிந்தால்தான் எனக்கு உன் ஞாபகம் இருப்பதாய் நீ நம்புவாய் போலிருக்கிறது. அழகிய பெண்ணின் புன்சிரிப்பில், எதிரே நிற்கிற இளைஞன் கவியாகிறான் என்பார்கள். நீ அந்த திருக்கானப்பேர்ப் பித்தனைப் போல், என்னையும் கவியாக்கி விட்டாய். மொழியின் நயங்களையும், பொருள் நுணுக்கங்களையும், தேர்ந்த கை மலர் தொடுப்பது போல், பதங்களை இணைக்கும் இங்கிதங்களையும் அறியாத பாமரனைக் கூட ஒர் அழகிய பெண் கவிஞன் ஆக்கி விடுகிறாள். நான் பாமரன் இல்லை. ஆனால் என்னையும் நீ கவியாக்கியிருப்பதை அறிந்தால், உன் மனம் ஒரு வேளை அதற்காக மகிழலாம். கர்வப்படலாம். கீழ்வரும் பாடல் மூலம் உனக்கு அந்தக் கர்வத்தை நான் அளிக்கலாமா?


“முத்தும் பவழமும்
நல்லிதழும் முறுவலுமாய்ச்
சித்திரமே போல்வந்தென்
சிந்தை குடிபுகுந்த
நித்தில வல்லி!
செல்வப் பூங்கோதாய்!
கத்தும் கடல்ஏழும்
சூழ்தரு காசினியில்
சித்தம் நினைப்புச்
செய்கை உள்ளளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/453&oldid=946682" இலிருந்து மீள்விக்கப்பட்டது