பக்கம்:நித்திலவல்லி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


படையாக அவர் மலர்வதை, இன்றுதான் அவள் காண்கிறாள். அது அவளுக்குக் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது.

“இப்படிச் சில சத்தியங்கள் செய்யும் போது, பொதுவாக இருக்கலாம். ஆனால், நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும். நீ இன்று செய்த சத்தியமும் அப்படிப் பெரியது. செல்வப் பூங்கோதை!” -என்றார் அவர்.

அவரே புகழ்ந்த இந்தச் சொற்களை உடனே அவளுக்குத் தெளிவாக விளங்கவில்லை என்றாலும், அவரை வணங்கி விடை பெற்றாள் அவள். அவரும் அவளை உணர்வு நெகிழ்ந்த குரலில், வாழ்த்தி அனுப்பினார். அவள் தயங்கித் தயங்கி நடந்து சென்றாள். அவள் தோற்றம் மறைந்ததும், ஈரம் நெகிழ்ந்திருந்த கண்களை மேலாடையால் துடைத்துக் கொண்டு, அவர் ஆபத்துதவிகளைக் கைதட்டி அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் நாம் கோநகர் செல்ல எல்லாம் ஆயத்தமாகட்டும்” என்று கட்டளையிட்டார். அவரது அந்தக் கட்டளைக் குரலில் இருந்த உணர்வின் நெகிழ்ச்சி, அவர்களுக்கே புதுமையாயிருந்தது.


15. போர் மூண்டது

ன்று அதி காலையிலிருந்தே, பாண்டிய நாட்டின் கோநகரமாகிய மதுரை எதையோ விரைந்து எதிர்பார்ப்பது போன்ற மர்மமான அமைதியில் திளைத்திருந்தது. அரண்மனைக்குள்ளும், கோட்டை மதில்களின் புறத்தேயும் வெறிச்சோடிக் கிடந்தது. பிரதான வாயில்களிலும், முக்கிய இடங்களிலும் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள களப்பிர வீரர்கள் கூரிய, வேல்களை ஏந்தியபடி காத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/470&oldid=946699" இலிருந்து மீள்விக்கப்பட்டது