பக்கம்:நித்திலவல்லி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

77



அவள் மிகவும் நிதானமாக எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள். தாமரைப் பூக்குவியலோடு இருந்த வண்டியைப் பூத பயங்கரப் படை வீரர் சந்தேகப்பட்டது, அவனுடைய சந்தேகத்தை நீங்கித் தாங்கள் மேலே சென்றது, யானைப் பாகன் அந்துவனைக் கண்டது முதலிய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சொன்னாள் அவள். கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மதுராபதி வித்தகர், இளையநம்பி என்னும் சுந்தர வாலிபனின் மேல் செல்வப் பூங்கோதை என்னும் அழகிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரியத்தையும், மயக்கத்தையும் கொண்ட சொற்களைத் தனியே பிரித்தெடுத்து விலக்கி, அவள் தெரிவித்தவற்றை அறிவதற்குப் போதுமான சொற்களை மட்டுமே புரிந்து ஏற்றுக் கொண்டார். இளையநம்பியைப் பற்றிக் கூற நேரிடுகையில், சில இடங்களில் நாணமும், சில இடங்களில் தன்னை மீறி அவன் அழகை வர்ணிப்பது போல் தன் வாக்கில் வந்து சேரும் பதங்களையும் தவிர்க்க முடியாமல், அவள் தான் கூற முற்பட்டவற்றைக் கூறிக் கொண்டிருந்த போது அந்த இணையற்ற அரச தந்திர மாமேதை உள்ளூற நகைத்தபடியே அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். மோகூருக்கு அருகே யானைக் குன்றின் சாரலில் சில இடங்களில் அருமையான முல்லைக் கொடிகள் சில தரை மண்ணாயுள்ள இடத்தில் தோன்றி அருகே மலைக் கருங்கல்லாய் இறுகிய பகுதியில் படர்ந்து, அந்தக் கருங்கற் பரப்பின் மேல் பூக்களைப் பூத்துக் கொட்டுவது உண்டு. அந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம், செல்வப் பூங்கோதை இந்த மலர்களின் மேன்மையையும், குளிர்ச்சியையும் நறுமணத்தையும் அந்தக் கருங்கல் என்றாவது உணர முடியுமா? ஒரு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போல், எவ்வளவு காலமாக இந்தப் பூக்கள் உதிர்ந்து அந்தக் கல்லை வழிபடுகின்றன! இந்தக் கொடியை ஒரு விதமான உணர்வுமின்றித் தாங்கும் ஆதார நிலமாக இருப்பதைத் தவிர, இதன் இதயத்து மென்மையையும் நறுமணங்களையும் சீதத் தன்மையையும் ஏற்றதற்கு அடையாளமாக அந்தக் கல் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/78&oldid=945358" இலிருந்து மீள்விக்கப்பட்டது