பக்கம்:நித்திலவல்லி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

93


வளைத்துக் கொண்டு, “கழற்சிங்கா! இப்போது கட்டு உன் நாணை” என்று அப்போதுதான் தெரிந்துகொண்டிருந்த அவன் பெயரை அன்போடு கூவியழைத்து அவனை நாண் ஏற்றி இருக்குமாறு செய்தான் இளையநம்பி. கழற்சிங்கன் கட்டி முடித்த பின்பும் நாண் தொய்வாகவே இருப்பதை இழுத்துப் பார்த்துவிட்டு, “நாண் இவ்வளவு தொய்வாக இருந்தால் உன் வில்லிலிருந்து அம்பே புறப்படாது” என்றான் இளையநம்பி.

“மெய்தான்! நண்பர்களுக்கு முன் என் வில்லிலிருந்து அம்புகள் புறப்படாது. அதன் நாண் ஏற்றப்படாமல் தளர்ந்தே இருக்கும். அதை நான் இறுக்கிக் கட்டி அம்பு மழை பொழிய இன்னும் வாய்ப்பே வரவில்லை. நீங்கள் வந்த பின்பு, இனியாவது உங்கள் தலைமையின் கீழ் எனக்கும் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும்” என்று கழற்சிங்கன் மறுமொழி கூறியபோது நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தான் இளையநம்பி.


13.நதியும் நாகரிகமும்

இளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா! உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/94&oldid=715263" இலிருந்து மீள்விக்கப்பட்டது