பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை ஆ. பன்னீர்செல்வம் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு குறளகம் -சென்னை. 600 108

பேராசிரியர் டாக்டர். ந. சுப்பு ரெட்டியார் அவர்களை, அவர் திருப்பதி திருaேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணி யாற்றி வந்த காலத்திலிருந்தே ஓரளவுக்கு அறிவேன் என்றாலும், அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவர் அப்பல்கலைக் கழகப் பணியிலிருந்து ஒய்வு பெற்று சென்னைக்கு வந்த பின்னரே எனக்கு வாய்த்தது. பேராசிர்யர் அவர்கள் கினைவுக் குமிழிகள்’ எனும் தலைப் பில் எழுதும் தன்-வரலாற்று நூற்கோவையில் ஏற்கனவே வெளிவந்துள்ள இரு தொகுதிகளையும் (1,3) படித்துள்ளேன். இந்நூற்கோவையின் இரண்டாம் தொகுதிக்கு நான் அணிந் துரை எழுதவேண்டும் எனப் பேராசிரியர் அவர்கள் ஒருநாள் என்னிடம் தெரிவித்தார்கள். அது எனக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. பேராசிரியர் அவர்கள் அவ்வாறு என்னைப் பணித்தமைக்கு அவர்கள் என்னிடம் கொண்டுள்ள பேரன்பே காரணமாகும்; அஃதன்றி வேறு எத்தகுதியினை யும் நான் பெற்றிருக்கவில்லை. அறிவிலும், அநுபவத்திலும் உயர்ந்து விளங்கும் பேராசிரியர் அவர்களுடைய நூலுக்கு

நான் அணிந்துரை வழங்குவதைப் பெரும் பேறாகக் கருது கின்றேன்.

இவ்வுலகில் ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒவ்வொரு தன்மையில் அமைந்து கிடக்கின்றது. சூழ்நிலைகளாலும், வாழ்க்கைப் போராட்டங்களாலும் வாழ்க்கைப் போக்குகள் மாறுபடுகின்றன. ஏதோ வாழ்கின்றோம்" என வாழ்நாளை ஒட்டிச் செல்பவர் டவர். வாழ்க்கை வாழ்வதற்கே என வாழ்பவர்கள் சிலர். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு வரலாறே. தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை மற்றவர் கள் போற்றிக் கொள்ளும் சிறப்பினை அடையப் பெற்றவர் கள் இபரியோர்களெனப் புகழ்ப் படுகின்றனர்,