பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம் தொடங்க முயற்சி 77

கொடுத்தார். அன்றிரவே திருச்சி இருப்பூர்தி ஏறி திருச்சி வந்து, தாமதியாமல் துறையூர் வந்தடைந்தேன்.

மறுநாள் காலையில் தாளாளரைச் சந்தித்து நான் போய் வந்த வரலாற்றை விரித்துரைத்தேன். முதலியார் நிர்வாகத்தைக் குறைவாகப் பேசியதை முற்றிலும் மறைத்து. விட்டேன். அப்போது தாளாளர் சின்னதுரை ஜமீந்தார் அரண்மனைக் கெதிரிலுள்ள உயர்நிலைத் தொடக்கப் பள்ளியின் மேல்மாடி அறையொன்றில் தங்கியிருந்தார். தந்தையார் உடல் நிலை குன்றியிருந்தது. அரண்மனைக்குள் புகுந்து நிர்வாகத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இருந்தார். அதற்கேற்ற காலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்த காலம் அது. செலவுக்கு என்னிடம் தந்த ரூ. 60/- க்கு சல்லிக்காசு விடாமல் ஒரு சிறிய குறிப்பேட்டில் கணக்கு எழுதி வைத்திருந்தேன். அதைக் காட்டினேன். அதில் ரூ 1-100 மீதி இருந்தது தெரிந்தது. அதை மட்டிலும் கவனித்துக் கொண்டார். வாய்மட்டிலும், "சரி தான் போங்கள். இது என்ன பெரிய கணக்கு?’ என்று அசட்டை யாக ஒலித்தது. "இன்னும் ஒரு வாரத்தில் சென்னை சென்று வரவேண்டும்' என்ற திட்டத்தைக் கூறி விடை பெற்றேன்.

குமிழி-75 11. என்மைத்துனரின் குடும்ப நிகழ்ச்சிகள்

திருச்சியில் என் கல்லூரி வாழ்க்கையின்போது சில நாட்கள் தாயுமான சுவாமி திருக்கோயில் என்னை ஈர்க்கும். அப்போதெல்லாம் நர்ன் அக்கோயில் சென்று சுற்றித் திரிந்த வண்ணம் இருப்பேன். அப்போதெல்லாம் தாயுமான சுவாமி கள் பாடல்’ என்ற நூல் என் கையிலிருக்கும். அந்த இளவயதில், பக்தி என்னை சர்க்கவில்லை. சமூகச்சேவை