பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மைத்துனரின் குடும்ப நிகழ்ச்சிகள் 79

குடும்பந்தான்; வீட்டுக்கு முதல் பெண்; அடுத்து ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். பெண்ணின் தந்தை சுப்பிரமணிய ரெட்டியார் புரோநோட்டு, பத்திரம் எழுதும் தொழிலை பொழுது போக்கும் தொழிலாக வைத்துக் கொண்டிருந்தாலும் அதில் நல்ல வருவாய் கிடைக்கின்றது; வேளாண்மையிலும் குடும்பத்திற்குத் தேவையான வருவாய் வருகின்றது. தவிர, பல குடும்பங்களில் நடைபெறும் பிணக்கு களையும் சச்சரவுகளையும் தீர்த்து வைப்பார்; நீதிமன்றத் திற்குப் போகும் நிலை ஏற்பட்டாலும் ஒருவருக்கு நன்கு உதவுவார்' என்று சுருக்கமாக விளக்கினார்.

என் மைத்துனர் தன் வருங்கால மாமனாரைப் பற்றி வானளாவப் புகழத் தொடங்கினார்; "இனிமேல் எந்த வித வழக்கு ஏற்பட்டாலும் கவலை இல்லை. நம் வீட்டிற்கே ஒரு பெரிய வழக்குரைஞர் வந்துவிட்டார். இவருக்குத் தெரியாத சட்ட நுணுக்கங்களே இல்லை. எல்லாச் சட்டதுணுக்கங் க்ளும் இவருக்கு அற்றுபடியாயிருக்கின்றன. நாமக்கல்வில் சில பெரிய வழக்குரைஞர்களும் சில விஷயங்களில் இவரைத் தான் யோசனை கேட்கின்றார்கள் எனக் கேள்வி. இவர் கிரயப் பத்திரமோ, கொதுவைப் பத்திரமோ எழுதுங்கால் அதில் இவர் வைக்கிற "சொட்டை’’ புதுதில்லி மேல்நிலை மன்ற நீதிபதிகளாலும் தகர்த்தெரிய முடியாது. நாமக்கல் பக்கத்தில் இவர் புகழ் எட்டுத் திசையினரும் நன்கறிந்தது."; என்று புகழ் மாலை சூட்டினார். -

இஃது இராமன் இளைய பெருமாளுக்கு அதுமனைப்

பற்றிக் கூறிய, -

இல்லாத உலகத் தெங்கும்

ஈங்கிவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் வேதக்

கடலுமே என்னும் காட்சி