பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்மைத்துனரின் குடும்ப நிகழ்ச்சிகள் 81

இன்னும் கேட்க வேண்டும்போல் இருக்கும். நாடாப்பதிவு வசதி அன்று இருந்திருந்தால் அவர்கள் பேச்சைப் பதிவு செய்து வைத்திருப்பேன். இருவரும் தொடர்ச்சியின்றிப் பலவாறு பேசினார்கள். அவர்கள் பேசியதன் முக்கிய கருத்தை மட்டிலும் கூறுவேன்; 'இனிமேல் எந்த வழக் கிற்கும் பெரிய வக்கீலிடம் போக வேண்டிய அவசியமில்லை; எல்லா நியாயங்களும் இவருக்கு அற்றுபடியாகும். சென்னை உயர்நீதிமன்ற நடுவர்கட்கும் அறியமுடியாத சட்ட நுணுக் கங்களை இவர் அறிவார். பாண்டு, பத்திரங்களைத் திறமை யாக எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே. சேலம் மாவட்டத் திலேயே இவரைப்போல் எவரையும் காணமுடியாது, சட்டப் புத்தகங்கள் அச்சாகும்போது தமிழில் ஒரு புத்தகம் இவருக்கு அனுப்பி விடுவார்கள். வீடு முழுவதும் சட்டப் புத்தகங் களால் நிரம்பியிருக்கின்றன’’ என்றார்கள். இவர்கள் பேச்சு என் மனைவிக்குச் சிறிதும் ஏற்றதாக இல்லை, "இவ்வளவு மூடர்களாக இருக்கிறார்களே. இன்னும் ஓராண்டுக்குள் குடும்பத்தில் என்னென்ன நடக்கப் போகின் றனவோ?’ என்று கலங்கினாள். எனக்கும் இவர்கள் பேச்சைக் கேட்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஒருவர் மற்றவர்மீது அதிகமான பற்று வைத்திருக்கும் போது அதனைத் தடுத்துப் பேசுவது நாகரிகமல்ல திருமணம் ஆகாத நிலையில் சம்பந்தியை இவ்வளவு புகழ வேண்டியதில்லை என்றுகூட நான் சொல்லவில்லை. என் மனைவி தாய் தந்தையர்களுடன் உரிமையுடன் எதையும் பேசலாம்; கடிந்தும் பேசலாம். அவர்கள் பேச்சுக்குத் தாளமும் போடலாம். என் அளவை நான் அறிந்தவன். தனிக் குடும்பம் வைத்தபிறகு முதன்முதலாக வந்திருப்பவர்கள். நன்றாக விருந்து வைத்து உபசரித்தோம். "இன்னும் ஒராண்டுக் காலத்தில் இதே பேச்சு" இருக்குமா? என்று பார்க்கின்றேன். தோசையைத் திருப்பிப் போடுவீர்

நி-6