பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நினைவுக் குமிழிகள்-2

கள். தோசை தீய்ந்து உன்பதற்குக்கூட முடியாத நிலையைக் காணப்போகிறீர்கள் என்று சொல்லி வைத்தாள். என் சிந்தனை வேறுவிதமாகச் சென்றது. திருவல்லிக்கேணி கடற்கரையில் கடலலைகள் மிக உயர்ந்து வருவது நினை வுக்கு வருகின்றது. ஒரு பெரிய அலை வருகின்றது; அதனைத் தொடர்ந்து இன்னொரு பெரிய அலை வருகின்றது, அதனைத் தொடர்ந்து சற்றுத் தொலைவில் மற்றொரு மிகப் பெரிய அலை வருகின்றது. இவற்றைப் பார்க்கும் எனக்கு இக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக் ஒன்றது. இந்த மாதிரியாக இருந்தது என் மாமியார் மாமனார் பேச்சு. இந்த அலைகள் தரையில் வந்து மோதித் திரும்பும்போது வருகின்ற அலைகளின் வேகத்தையும் உயரத்தையும் குலைப்பதும் என் நினைவுக்கு வருகின்றது. இந்த மாதிரி ஒரலை பிறிதோர் அலையை விழுங்குவதை இன்னும் சில மாதங்களில் இவர்கள் உணரப் போகின்றார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் தங்கி ஆாமனார் மாமியார் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு, :நான்கு நாட்கள் முன்னதாகத் திருமணத்திற்கு வந்துவிட வேண்டும்" என்று சொல்லிப் போனார்கள்.

திருமணம் சிவநாயகன் பட்டியில் சிறிய அளவில் நடை பெற்றது. இரண்டு நாட்கள் முன்னதாகவே பொட்டணம் சென்று திருமணத்தில் கலந்து கொண்டோம். கூட்டம் அதிகம் இல்லை. இரண்டாவது திருமணத்தானே. திருமணத் தன்றே முதலிரவு. நிகழ்ச்சியும் நடைபெற்றுவிட்டது. திருமணத் தன்றே ஒருசில பிரமுகர்கள் காதோடு காதாக என்னிடம் சுப்பிரமணியத்தின் குணாதிசயங்களைப் பற்றி ஒதினார்கள். 'மாமனாரிடம் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும். பல்வேறு யோசனைகளைச் சிறுகச் சிறுகஒதுவார். அவற்றை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு விட வேண்டும். எந்த யோசனையையும் நிறைவேற்றக்