பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

jX

தன்-வரலாறு எழுதுவதற்கு மிகுந்த தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கையால் கூடாத செயல்கள் எவையு. மில. தன்னம்பிக்கையுடையோர் மனத்திட்பமும், செயல் திறனும், அறிவுத் தெளிவும் உடையவர்களாக விளங்குதல் இயல்பேயாகும். அவ்வகையில் எழுந்துள்ள பேராசிரியர் அவர்களின் நினைவுக் குமிழிகள் படித்துப் பயன்பெறுவதற் குரியனவாகும்.

“If is not the load that breaks you down; it is the way you carry it' என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பேராசிரியர் அவர்கள் தமக்குரிய பொறுப்புகளைத் திட்ட மிட்ட முறையில் செயற்பாங்குடன் நிறைவேற்றி வருபவரா வார்கள். அதனால் வாழ்க்கையைச் சுமையாகக் கொள்ளா மல் சுவையாக்கிக் கொண்டு வாழ்ந்து வருபவர். நீர் வழிப் படு உம் புணை போலன்றி எதிரிட்டு-எதிர் நீச்சலிட்டு - வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டியவர்; சாதனைகளைப் படைத்தவர். -

இத் தொகுதியில் பேராசிரியர் அவர்கள் தம்முடைய துறையூர் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்த காலத்தில் அவர் அடைந்த இடர்ப்பாடுகளும், இன்னல்களும் விரிப்பின் நீளும், தொகுப்பின் மிஞ்சும், என்ற முறையிலேயே அமைந்துள்ளதனைக் காண்கிறோம். "ஞானியார் மரபில் பிறந்து வளர்ந்து மேற்கல்வி பயின்ற பேராசிரியர் அவர்கள், ஆசிரியப் பணியில் சிறந்து விளங் கியவர். மிகக் குறைந்த சம்பளத்தில் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் அவர்கள் நாள் முழுவதையும் பள்ளியின் முன்னேற்றத்திற்குரிய செயற் பாடுகளிலேயே க ழி த் து வந்துள்ளார்கள் (பக். 141) . பள்ளியைச் சொந்த நிறுவனமாகவே கருதி உழைத்தவர் (பக். 204). என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு ஆளாகி பள்ளி முன்னேற்றத் திற்கு ஒல்லும் கையெல்லாம் உழைத்துக் களிப்படைந்தவர். 'பணியே பரமன் வழிபாடு' எனக் கொண்டு வாழ்ந்தவர். "மடி நிறையப் பொருளும், மனம் நிறைய இருளும்'படைத்த "கஞ்சப் பிரபுக்களால் தொடங்கப் பெற்ற புதிய பள்ளியில் பல பிரச்சினைகளையும் சமாளிக்கும் பொறுப்பு தம் தலை மீது அமைந்ததால் தலைமை ஆசிரியர் எனத் தம்மை அழைத்தனரோ எனப் பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுவது