பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நினைவுக் குமிழிகள்-2

கொண்டார். சொத்துகள் வாங்குதல் முதலிய நற்காரியங்கள் நடைபெறும் என்று குறிப்பில் எழுதப்பெற்றிருந்தது. உடனே ஊர் அருகில் குட்டைமேட்டில் ஒரு நிலம் விலைக்கு வந்தது. அதைப் பேசிக் கிரயத்தை முடித்துக் கொண்டார். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்புண்டு என்று வாரப் பலனில் சொல்லப் பெற்றிருக்கும். உடனே நெல் அரைக்கும் ஆலையை நிறுவக் கட்டடவேலை தொடங்கினார். பெரிய அதிகாரிகள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு பயணங்கள் செய்வதைப்போல் வார பலனில் சொல்லியபடி காரியங்களைச் செய்துவந்தார். * வளவனாயினும் அள வறிந்து அழித்து உண்’ என்ற பாட்டியின் பொன்மொழி யைச் சிந்தித்தார் இலர்.

அளவறிந்து வாழாதான்

. வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றக் கெடும்."

என்ற வள்ளுவர் வாக்கை ஒர்ந்திலர். ஓராண்டுவரை திருக்குறள் பாடம்கேட்டு அறிந்தவர்தான். என் செய்வது? பணத்தை எவ்வளவுதான் பத்திரப்படுத்தி வைத்தாலும் போகிற நேரம் வந்தால் போய்விடும் என்று சாதாரண மக்கள் பேசிவருவதையும் அறிந்தவர்தான். ஒருசமயம் திருமணம் முடிந்தபிறகு மாமனார் அடிக்கடிவந்து முகாம் அமைத்துக் கொண்டிருந்த காலத்தில் மணியக்காரர் திண்ணைக்கு என் மைத்துனர் வந்தார். மணியாரன்' என்று வழங்கப்பெறும் நல்லப்ப ரெட்டியார் என்ன இராமசாமி, இப்போது வண்டி எப்படி ஒடுகின்றது?’ என்று கேட்க, என் மைத்துனர் "தலைகீழாக ஓடுகின்றது!’ என்றார். நான். நிறுத்தும் விசை வண்டியில் பொருத்தப் பெற்றிருந்தால் நன்றாக இருக்கும்' என்ற ஒரு குறிப்பைத்

2. கொன்றைவேந்தன்.81 - 3. குறள்-479 (வலியறிதல்)