பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் பல்வேறு வடிவங்கள் 91

சாதகத்தை ஆராயும் சோதிடர்களையெல்லாம் தக்கமுறை யில் நெறிப்படுத்தி 'இந்தக் கோள் அந்தக் கோளை நோக்கு கின்றது. திசாபுத்தி பலன்களும் நன்முறையில் உள்ளன என்று சொல்லுவதற்கில்லை. இந்த வீட்டில் ஏதோ துர் மரணம் ஏற்படும் என்பதற்கு கிரகங்களின் இருப்பு சூசகமாகக் குறிப்பிடுகின்றது. என்ன என்பதைத் திட்ட மாகச் சொல்லுவதற்கில்லை' என்று சொல்ல வைப்பார். என் மைத்துனர் தாம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதனால், குழந்தையுடன் தாய் வீட்டில் வாழும் தன் முதல் மனைவி மனம் உடைந்து தன் மகன் இருப்பதையும் மறந்து தற்கொலை செய்து கொள்வாள் என்று நினைப்பார்" இந்த வழியில் சிந்தனையைச் செலுத்தும் முறையில் சுப்பிரமணியம் சோதிடரிடம் குறுக்குப் பேச்சுகளை உதிர்ப் பார். சோதிடரும் கிரகங்களின் நிலையையும், தீயபலன் களைக் குறிப்பிடும் நிலையையும் உணர்த்தும் போக்கில் சோதிட நூலில் உள்ள ஒரு பாடலை இசையுடன் பாடி என் மைத்துனரின் மனம் அதில் ஈடுபடும்படி செய்வார். உடனே என் மைத்துனர் மலையாள சோதிடர் எழுதித் தந்துள்ள குறிப்பேடுகளின் உரிய பக்கங்களைப் புரட்டி அதிலுள்ள பலன்களும் இந்தச் சோதிடர் சொல்லும் பலன்களும் ஒத்து வருகின்றவா என்று சோதிக்கத் தொடங்கி விடுவார். அடிக் கடி வெவ்வேறு சோதிடர்களைக் கொணர்ந்து சில ஆண்டுகள் சோதிட ஆராய்ச்சியிலேயே காலத்தைப் போக்குவார். இந்த மயக்கத்தால்-அற்ப மகிழ்ச்சியால்-மாமனார் குடும்பத்துடன் அடிக்கடி வந்து வாரக்கணக்கில் முகாம் போடுகின்றாரே என்று சிந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்து விடுவார்.

சோதிடர்களும் சுப்பிரமணியத்தின் சூழ்ச்சியை ஒரு வாறு புரிந்துகொண்டு தம் கற்பனையைப் பயன்படுத்தி இவர் மகனைப்பற்றிப்(பெயர் இப்போது நினைவில் இல்லை)