பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நினைவுக் குமிழிகள்-2

பலன் சொல்லும்போது இவர் மனம் மகிழும் வண்ணம் சொல்லுவார்கள். இவன் சாதகத்தில் கிரகங்களின் நிலை யையும் அவை ஒன்றையொன்று பார்க்கும் நிலையை நோக்கும்போது தீயபலன்களைச் சொல்வதற்கே வாய்ப் பில்லை. இஃது இராஜ அம்ச முள்ள ஒரு சாதகம் வாழ்க்கை முழுவதும் சுக ஜீவனத்தைச் சொல்லுகின்றது.” என்று புகழ்ந்து பேசுவார்கள். அப்போது பையன் இரண்

டாம் படிவ வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். தந்தையின் பேச்சையும் மீறி நிற்கும் இவனுடைய பேச்சு. பெரியவர்கள் நடுவிலும் வந்து அமர்ந்து கொண்டு பேசத் தொடங்குவான்.

நாமக்கல் உயர்நிலைப்பள்ளியில் முதல்படிவம் படித்துக் கொண்டிருந்தான் அவன் தமக்கையின் திருமணத்தின் போது, மூன்றாவது படிவத்திற்குமேல் படிப்பு அவனை எட்டவில்லை. என் மைத்துனர் இரண்டாம் திருமணம் ஆகி ஒன்றரையாண்டுக்குள் என் மனைவிக்குத் தாய்வீட்டு உறவு அறவே இல்லாமல் போய்விட்டது. நாங்கள் பொட்டணம் போவது-வருவது நின்று போனதால் இப்பையனைப் பற்றி ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. படிப்பை முடித்துக் கொண்டதால் ஊர் சுற்றுகின்றான் என்றும், பெரிய இடங் களில் ஏதோ சிறு களவுகள் செய்து அடிக்கடி மாட்டிக் கொள்ளுகின்றான் என்றும் செவிவழிச் செய்திகள் எங்களை எட்டும். நாங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை; மேலும் மேலும் விருப்பத்துடன் விசாரிப்பதும் இல்லை. ஒன்றிரண்டு முறை சிறைத் தண்டனை பெற்றான் என்னும் செய்தி எங்களை எட்டியது.

இச்சமயத்தில் யாரோ எப்பொழுதோ சொன்ன ஒரு சிறு கதை நினைவிற்கு வருகின்றது. ஒரு செல்வக் குடும் பத்தில் கணவன்-மனைவி மிக ஒற்றுமையாக அன்பு மிளிர வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்திற்கு வேண்டிய ஒருவன்